அங்குசம் பார்வையில் ‘ஓ பட்டர்ஃப்ளை’
தயாரிப்பு: ‘ஆண்ட்ஹில் சினிமா & பாலம்பூர் டாக்கீஸ் ‘ வெங்கி, ஆனந்த் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல். டைரக்டர்: விஜய் ரங்கநாதன். ஆர்டிஸ்ட்: நிவேதிதா சதீஷ், அதுல், சிபி சந்திரன்,, நாசர், லட்சுமி பிரியா,சந்திரமெளலி, கீதா கைலாசம். ஒளிப்பதிவு: வேதாராமன் சங்கரன், இசை: வைசாக் சோமநாத், எடிட்டிங்: புவனேஷ் மணிவண்ணன், புரொடக்சன் டிசைனர்: சரண்யா ரவிச்சந்திரன், காஸ்ட்யூம் டிசைனர்: டீனா ரொசாரியோ, பி.ஆர்.ஓ. : ரியாஸ் அகமது & பாரஸ் ரியாஸ்.
குடும்பத்தை விட்டு தனியே வசிக்கும் கெளரி ( நிவேதிதா சதீஷ்) தன்னைத் தானே சிறை வைத்துக் கொள்கிறார். வீட்டு வேலைக்காக அம்மா அனுப்பும் வேலைக்காரியிடம் கூட வினோதமாக நடக்கிறார். அவரின் மைண்டுக்குள் திடீர் திடீரென கத்தி பறந்து வந்து கழுத்தை அறுக்கிறது. கோல்ஃப் பந்து உருண்டு ஓடுகிறது. இந்த ஆபத்தான சூழலில் தங்கையைத் தேடி வருகிறார் சாமியாரிணியான அக்கா லட்சுமி பிரியா. “நான் போறது பாதை. நீ கிடப்பது பள்ளம். நடந்ததை சொன்னால் தான் உனக்கு நல்லது” என்கிறார் அக்கா.அப்புறம் தான் அக்காவிடம் ஃப்ளாஷ் பேக் கை சொல்கிறார்.

“காதலித்து கல்யாணம் செய்து கொண்ட அர்ஜுன் (அதுல்) சாவுக்கு நான் தான் காரணம். ஏன்னா மாஜி காதலன் சூர்யா ( சிபி சந்திரன்) நாங்கள் இருந்த கோத்தகிரி குறிஞ்சி இல்லத்துக்கு வந்தான். அவன் வந்தான்… அர்ஜுனனுக்கு சந்தேகம் வந்தது. அதன் பிறகு எல்லாமே நடந்து முடிந்தது” இதான் நிவேதிதா சதீஷ் சொன்ன…. நமக்கு புரிந்த ஃப்ளாஷ் பேக். அர்ஜுன் சாவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு, 24 மணி நேரம் முன்பு, 6 மணி நேரம் முன்பு என டைரக்டர் விஜய் ரங்கநாதன் கதையை நகர்த்திச் செல்வது ஓகே தான். ஆனா பேச்சு ஓவராகி நமக்கு ஹேங் ஓவராகுது.
குறிஞ்சி இல்லத்தில் பட்டர் ஃப்ளை வளர்ப்பவராக நாசர்…. கை பார்த்து ஜோசியம் சொல்லும் சோடா புட்டி ஜோசியராக கீதா கைலாசம் நடிச்சிருக்காக…. இரண்டு மணி நேரமும் பேசுறாய்ங்க…. பேசுறாய்ங்க… க்ளைமாக்ஸ் முடிஞ்ச பிறகும் பேசுறாய்ங்க…. மியூசிக் டைரக்டர் வைஸாக் சோமநாத்தின் பாடல்களும் பின்னணி இசையும் தான் நம்ம கடுகடுப்பை கொஞ்சமாவது தணிக்குது.
அதேபோல் கேமரா மேன் வேதாராமன் சங்கரனின் கோணங்களும் படத்துடன் நம்மை பயணிக்க வைக்குது. நிவேதிதா சதீஷ், அதுல், சிபி கூட்டணி நல்லா சரக்கடிக்குது…. கஞ்சா இழுக்குது….மாத்தி மாத்தி பேசிக்கொண்டே இருக்குது…. கீதா கைலாசம் ஒரு ஃப்ளாஷ் பேக் சொல்றாரு. ( நல்ல வேளை சீன்களாக காட்டல).
எலைட் பாரிலோ, ஸ்டார் ஓட்டல் பாரிலோ உட்கார்ந்து ரிலேஷன்ஷிப், லிவிங் டுகெதர், டேட்டிங், பெட்டிங், கட்டிங், ஒட்டிங் இதெல்லாம் தப்பே இல்லை. இது இல்லாமல் வாழ்க்கை இல்லை, இப்படி வாழாது மனுசனே இல்லைன்னு நாலஞ்சு பெக் சரக்கடிச்சுட்டு நாலு மணி நேரம் பேசிட்டு… வீட்டுக்கு போன் போட்டு தன் பொண்டாட்டி படிதான்டா பத்தினியா இருக்காளான்னு செக் பண்ணி சேடிஸ்ஃபேக் ஷன் ஆகுற சேடிஸ்ட் குரூப்புக்கான சினிமா… நிச்சயமாக வெகுஜனங்களுக்கான சினிமா இல்லை.
அங்குசம் பார்வையில் ‘ஓ பட்டர்ஃப்ளை’ 33/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.