“Omega Centre of Hope” 6-வது பட்டமளிப்பு விழா மற்றும் திறன் கண்காட்சி
Omega Health care மற்றும் OFSI உதவியுடன் Omega Centre of Hope நடத்தும் 6-வது பட்டமளிப்பு விழா மற்றும் திறன் கண்காட்சி திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள ஹோப் ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில்Dr. Guruvayurappan. P.V [Executive Vice President – Human Resource Omega Healthcare Management Services Pvt. Ltd., & Board of Director– OFSI] மற்றும் Mrs. Sunanda Rangarajan [CEO, Omega Forum for Social Impact] அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, 439மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்ததுடன், பட்டமளிப்பு விழா சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடக்க முக்கிய பங்காற்றினார். அதனை தொடர்ந்து திறன் கண்காட்சி நடத்தப்பட்டது
திறன் கண்காட்சியில் மாணவர்கள் தங்களின் திறமைகள் மற்றும் படைப்புகளை சிறப்பாக காட்சிப்படுத்தினர். மாணவர்களின் திறமைகள், தன்னம்பிக்கை மற்றும் தொழில்திறன்களை சிறப்பாக காட்சிப்படுத்திய இந்நிகழ்வு, அனைவரின் ஒருங்கிணைந்த பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பால் மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.