அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ரூ.48 லட்சம் இழந்த அரசு அதிகாரி ! ஆன்லைன் பங்கு சந்தை மோசடி !

திருச்சியில் அடகு நகையை விற்க

போலியான இணைய தளம் மூலம் பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத்தருவதாக கூறி ஒய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ஆன்லைன் மூலம் ரூ.48,00,000/- ஏமாற்றிய நபர்களிடமிருந்து பணத்தை மீட்டு, காவல் ஆணையர் அவர்கள் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்கள்.

கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் திருச்சி மாநகரம் கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட ராக்போர்ட் நகரில் வசிக்கும் ராஜ பெருமாள் (75) வயது ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் பங்குசந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுதருவதாக உறுதியளித்து வாட்ஸ்ஆப்-ல் வந்த குறுஞ்செய்தியில் உள்ள LINK மூலம் ரூ.48 இலட்சம் முதலீடு செய்தும், அவர்கள் உறதியளித்தபடி பணம் திரும்ப கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து திருச்சி மாநகர சைபர் குற்றப் பிரிவில் மேற்படி ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கடந்த 11.11.2025ந்தேதி கொடுத்த புகார் தொடர்பாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி., இ.கா.ப.,  உத்திரவின்பேரில், திருச்சி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மனுரசீது வழங்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஆன்லைன் மோசடிவிசாரணையில், மனுதாரரிடம் Wexdor.com என்ற போலி இணையதளம் மூலம், அவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு வந்த LINK மூலம் மனுதாராருக்கு என மேற்கண்ட இணையதளத்தில் ஒரு கணக்கு உருவாக்கப்பட்டு உண்மையாக பங்கு சந்தையில் முதலீடு செய்வதுபோல நம்ப வைத்து, மனுதாரரிடமிருந்து ரூ.48இலட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி உள்ளார்கள் என்பதும், மனுதாரர் இழந்த பணம் குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் உள்ள இரு வங்கி கணக்குகளுக்கு சென்றிப்பதும், அவ்வங்கிகளில் இருந்து சுமார் 20 வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

திருச்சி மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, சம்மந்தப்பட்டு வங்கிகளுக்கு உடனடியாக மனுதாரர் இழந்த பணம் வரவு வைக்கப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய கடிதம் அனுப்பப்பட்டது. மேலும் காவல்துறையினரின் தொடர் நடவடிக்கையின் காரணமாக மனுதாரர் இழந்த பணம் ரூ.48 இலட்சம் முழுவதும், திருச்சி நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று, பணம் மீட்கப்பட்டு, மனுதாரரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதற்குண்டான ஆவணங்களை (Statement) திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாதிக்கப்பட்ட மனுதாரரை நேரில் அழைத்து வழங்கினார்கள்.

https://www.livyashree.com/

மேலும் இது போன்று வாட்ஸ்அப்பில் மற்றும் இதர சமூக வலைதளங்களில் வரும் போலியான விளம்பரங்களை உண்மை என்று நம்பி அதில் வரும் link-ஐ Click செய்து வங்கி விபரங்களையோ அல்லது சுயவிபரங்களையோ மற்றும் OTP-க்களையோ பகிர்ந்து ஏமாற வேண்டாம் எனவும், மேலும் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என்று ஆன்லைன் மூலம் Part time Job என்ற பெயரிலும் பங்கு சந்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வரும் போலியான விளம்பரங்களை நம்பி பணம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்றும் அவ்வாறு யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண்: 1930-ஐ விரைவாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும் காவல்துறை  தொிவித்துள்ளனா்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.