அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

டாஸ்மாக்கை மூட சொன்னா … மனமகிழ் மன்றம்னு புதுசா திறக்குறாங்க !

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மனோகரன், சொந்த மண்ணில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வேட்கையில் களத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதே ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதாவை ஜெயிக்க வைக்க ஓடிய அவரது கால்கள், இன்று தனக்காக வீடு வீடாக தேடிச்செல்கிறது. மணிகண்டம் பகுதியில் பிரச்சாரத்தின்போது, மைக் பிடித்த மனோகரன் எதிர்க்கட்சியை ஒரே பிடியாக பிடித்துவிட்டார்.

அப்போது, “ஒவ்வொரு குடும்பத்துக்கும் அண்ணா திமுக ஆட்சி அமைந்தவுடனே அண்ணன் எடப்பாடியார் முதலமைச்சர் ஆன உடனே ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்தாயிரம் நிதி உதவி வழங்கப்படும்னு சொல்லிருக்கார். அதுமட்டுமல்ல நம்முடைய பெண்களுக்கு நம்முடைய குடும்பத்திற்கு ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிட்ஜ் வழங்குறேன்னு சொல்லிருக்காங்க. ஏற்கனவே, அம்மா இருக்கறப்ப கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் எல்லாருக்கும் கொடுத்தாங்களா இல்லையா?  அதே மாதிரி நம்முடைய அண்ணன் எடப்பாடியாருடைய ஆட்சி அமைந்த உடனே உங்களுக்கு பிரிட்ஜ் கண்டிப்பாக வரும்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

வாக்கு சேகாிப்பில் அதிமுக வேட்பாளர் மனோகரன்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ₹10,000 குடும்பத்தொகை உதவி தொகையாக வழங்கப்படும். இப்ப ஆயிரம் ரூபா பென்ஷன் வாங்கி 1000 ரூபா உதவி தொகை வாங்கி இருக்கவங்கல்லாம் 2000 ரூபா தரேன்னு சொல்லிருக்கார். பெண்களுக்கு மட்டும் இலவசமா இல்ல ஆண்களுக்கும் இலவசமாக பேருந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று சொல்லி இருக்கார். எனவேதான் மக்களுக்காக ஒரு ஆட்சி மக்களாட்சி வர வேண்டும். அது அண்ணன் எடப்பாடியார் தலைமையிலே வரவேண்டும். இன்னைக்கு தமிழ்நாடு முழுவதும் அண்ணா திமுகவுக்கு ஆதரவான அலை வீசி கொண்டிருக்கிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சுமார் 210 தொகுதியில அண்ணா திமுக வெற்றி பெறும் என்று பல்வேறு பத்திரிகைகளில் ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருக்கிறது. நம்ம தொகுதியை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை.  ஒரு குடும்பத்தில்தான் அந்த ஆட்சி போய் சேர்ந்தது. ஒரு வருஷத்துல 30ஆயிரம் கோடி ஊழல் செஞ்சிருக்காங்க.  ஒரு வருஷத்துல 30 ஆயிரம் கோடி.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

வாக்கு சேகாிப்பில் அதிமுக வேட்பாளர் மனோகரன்டாஸ்மாக்ல இப்ப புதுசா கண்டுபிடிச்சிருக்காங்க.  இங்கேயும் ப்ரமோஷன் வந்துருச்சு. எல்2 ,எல்3-ன்னு சொல்லி தமிழ்நாடு முழுவதும் சுமார் ஆயிரம் இடங்களில் மனமகிழ் மன்றங்களை ஆரம்பிச்சிருக்காங்க. அங்க போனா அதுக்கு மேல நான் சொல்ல விரும்பல. தமிழ்நாட்டுலதான் இந்த கூத்து எல்லாம் நடக்குது. ஆக, அம்மா சொன்ன மாதிரி டாஸ்மாக் ஒழிக்கணும்னா படிப்படியாக ஒழிக்கணும்.  500 கடைகளை குறைப்போம். அப்படி குறைச்சுக்கிட்டே வந்தா ஒரு ஸ்டேஜ்ல குடிக்கிறது குறைஞ்சிடும். டாஸ்மாக் கடைகளும் குறைஞ்சிடும். திட்டம் அம்மாவுடைய திட்டம். இவங்க என்ன பண்றாங்கன்னா டாஸ்மாக் கடை மட்டும் பத்தாதுன்னு ஒரு கடை இருக்கு அது பூரா மனமகிழ் மன்றமாக நடக்கும்னு சொல்றாங்க.

மீண்டும் தமிழகத்திலே அமைதியான ஒரு ஆட்சி. மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சி. ஒரு நல்லாட்சி. ஏழை இளையருடைய நல்லாட்சி நடக்க வேண்டும் என்று சொன்னால், நீங்க அனைவரும் தயவு செய்து இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு என்னை ஜெயிக்க வேண்டும். ” என்பதாக பேசி வாக்குகளை சேகரித்து வருகிறார்.

–              அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.