மோப்ப நாய்க்கு பெயர் வைத்து சர்ச்சையில் சிக்கிய எஸ்.பி. – வலுக்கும் எதிர்ப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் மோப்ப நாய் ஒன்றுக்கு அதியன் என பெயர் சூட்டியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

தர்மபுரி மாவட்ட  காவல் துறை அலுவலகத்தில் மோப்ப நாய் பிரிவில் புதிதாக மோப்ப நாய் குட்டி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. கொலை, கொள்ளை உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸார் துப்பு துலக்குவதில் இந்த மோப்ப நாய் முக்கிய பங்கும் வைக்கும் என்று கூறப்படுகிறது.

SVS வெறும் பிராண்ட் அல்ல - 4 தலைமுறை கடந்த பாரம்பரிய பிணைப்பு

அதன்படி போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு போதைப் பொருள் கண்டுபிடிக்கும் மோப்பநாய் வழங்க தமிழக அரசால்  உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்திற்கு கோயமுத்தூரிலிருந்து மோப்பநாய் ஒன்று புதியதாக  வரவழைக்கப்பட்டது.

காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்,
காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்,

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அந்த மோப்ப நாய்க் குட்டியை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S.மகேஸ்வரன், அவர்கள் பார்வையிட்டு அதற்கு “அதியன்” என்று பெயர் சூட்டினார்.

இந்த மோப்பநாய் குட்டிக்கு போதைப் பொருள்களை மோப்பம் செய்து கண்டறிவது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு, பின் போதைப் பொருள் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மோப்ப நாய் குட்டிக்கு “அதியன்”  என்று பெயர் வைக்கப்பட்டதற்க்கு தற்போது கடும் எதிர்ப்புகள் எழுந்தன. சமீபத்தில் வெளியான வெளியான வேட்டையன் திரைப்படத்தில் ரஜினி கதாபாத்திரத்தின் பெயர் அதியன்.

சர்ச்சையை ஏற்படுத்திய அதியன் யார்?

அதியமான்-ஔவையார்

அதியமான்-ஔவையார்

தகடூரை, (தர்மபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். கடையெழு வள்ளல்களில் ஒருவரான   அதியமான் ,  (அதியன், அதிகன், அதிகமான், )  என்ற பெயரிலும் அழைக்கப்பட்டவர்.

ஆற்றலும், வீரமும் மிக்கவன்; குடிமக்கள் நலன் கருதி, ஆட்சிப் புரிந்தவன். நாடிவரும் அறிஞர், புலவர்களுக்கு செல்வத்தை வாரி வழங்கி, பெருமிதம் அடைந்தவன்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

ஒரு நாள் – மலைவளம் காணச் சென்ற அதியமான். மலை உச்சியில், பிளவுப்பட்ட பாறை ஒன்றின் பக்கம், நெல்லி மரத்தில் நெல்லிக்கனி தொங்குவதைக் கண்டான். அது மிக அரிய கனி.

அந்த அதிசய நெல்லிக்கனியை உண்டு, நீண்ட காலம் உயிர் வாழ்வதால் என்ன பயன்… என்னை விடவும், உலகுக்கு பயன்படுபவர் அல்லவா உண்ண வேண்டும்’ என்று எண்ணி

அதியமான்-ஔவையார்
அதியமான்-ஔவையார்

அக்கனியை  தன்னை நாடி வந்த அவ்வை மூதாட்டிக்கு  கொடுத்தான்  நெல்லிக்கனியை உண்டு நீண்டகாலம் வாழ்ந்த அவ்வையார், தமிழ்மொழிக்கும், நாட்டுக்கும் ஈடு இணையற்ற பணி செய்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். என்று புராண வரலாறு கூறுகின்றன.

அப்படிப்பட்ட அதியன் என்று அழைக்கப்பட்ட அதியமான் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஒரு மோப்ப நாய் குட்டிக்ககு அதியன் என பெயர் சூட்டிவிட்டார் என்று கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகிறார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அவர்களில். தர்மபுரியை சேர்ந்த வழக்கறிஞர்  CP சரவணன் தனது முகநூல் பக்கத்தில்  “எங்க ஊர் அரசனோட பெயரை  நாய்க்கு வைக்கலாமா எஸ்.பி ? என கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும் விவரம் அறிய அவரின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டோம்.  எவ்வளவு ஆணவம் இருந்தால் எங்கள் பகுதி ஆண்ட அரசன் அதியமான் பெயரை வைத்திருப்பார், ஏன் அவருடைய பெயரில் பாதியை மகேஷ் என்று வைக்க வேண்டியதுதானே இதுகுறித்து அவரது அலைபேசி தொடர்பு கொண்டு கேட்டேன்  நீ யாரு ? நேரில் வா பேசலாம் என்று மிரட்டுகிறார். அரசியல் வாதிகளின்  பெயர்களை வைப்பாரா இவர் ? எவ்வளவு திமீர் இருக்கும் பாருங்க என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

பெயர் சர்ச்சை குறித்து தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவரது அலைபேசி எண்ணை எடுக்கவேயில்லை.

தர்மபுரி பகுதியை ஆண்ட மன்னன் அதியமான் பெயரை சூட்டியதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது ஞாயமானது தான் . அதேவேளையில் மன்னன் அதியமானும் காசிக்கு சென்று அங்குள்ள கால பைரவரை வணங்கிவிட்டு போருக்கு போனால் வெற்றி நிச்சயம் என்று அவரது நம்பிக்கை அதனடிப்படையில் தற்போது அதியமான் கோட்டை அருகிலே அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காலபைரவர்( நாய் வாகனததோடு ) வீற்றிருக்கிறார் அதனடைபடையில் கூட மன்னனை போல வேட்டை ஆட பெயரை சூட்டி இருக்கலாம். இருப்பினும் மக்கள் உணர்வுக்கு மதிப்பு அளிப்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை. பொறுத்திருந்து பார்கலாம்.

—   மணிகண்டன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.