திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தினருக்கு நெறிப்படுத்துதல் கூட்டம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தினருக்கு நெறிப்படுத்துதல் கூட்டம்

எம் ஜே எஃப் பெரம்பலூர் சுப்ரீம் லயன் சங்கம் துவங்க இருக்கும் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க புதிய உறுப்பினர்களுக்கு நெறிமுறைப்படுத்துதல் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கணேஷ் கொடி வணக்கம் செலுத்தினார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

அரிமா சங்க வழிபாட்டினை கார்த்திக் எடுத்துரைத்தார். பொறியாளர் குணாளன் தலைமை உரையாற்றினார். ஓரியண்டேசன் மாவட்ட தலைவர் ஸ்ரீராம் புதிய உறுப்பினர்களுக்கு லயன்ஸ் பேரியக்கத்தின் வரலாறு மற்றும் அமைப்பு குறித்து பேசுகையில், 1879 ஆம் ஆண்டு 13ம் நாள் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரிசோனா மாநிலத்தில் சிலா ஆற்றின் கரையில் அமைக்கப்ட்டிருந்த ராணுவ முகாம் ஒன்றில் பிறந்த மெல்வின் ஜோன்ஸ் என்பவரால் 1917ம் ஆண்டு இந்த “அரிமா சங்கம்” என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. பின்னர் அது பல்வேறு கட்டங்களைத் தாண்டி இன்று உலகளாவிய அமைப்பாக 203 நாடுகளில் பரவி உள்ள இவ்வமைப்பு, உலகம் முழுவதும் நலிந்தோர்க்கான நலதிட்டங்களை செய்துவருகிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஹெலன் கெல்லர் தன்னுடைய ஒன்னரை வயதிலேயே பார்வையும் கேட்கும் திறனையும் இழந்த அம்மையார் 1925ம் ஆண்டு நடைபெற்ற அரிமா சங்க பன்னாடு கூட்டத்தில் பார்வைத் திறனை காப்பதற்கும்,பார்வையற்றோர்க்கு தொண்டு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார். உங்களால் பார்க்கமுடிகிறது, உங்களால் கேட்க முடிகிறது,நீங்கள் இரக்கமுள்ளவர்களாகவும் திகழ்கிறீர்கள். குருட்டுத் தன்மைக்கெதிரான புனித வீரர்களாக நீங்கள் தொடர்ந்து விளங்கமாட்டீர்களா? என்றார். அரிமாக்கள் அதை ஏற்று “பார்வைத்திறன் காத்தல், மற்றும் பார்வையிழந்தோர்க்கு பாடுபடுதல்”என்பதை தங்கள் முக்கிய செயல் திட்டமாக ஏற்றுக் கொண்டனர்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

அரிமா சங்கங்களின் குறிக்கோளானது அனைத்து நாட்டு நல்லுறவை உலகெங்கும் உள்ள பெருமக்களிடையே உருவாக்கி வளர்த்தல் நல்லரசு, நற்குடிமை ஆகியவற்றின் அடிப்படைக் கூறுகளைப் பெருக்குதல் குடிமை, கலாச்சாரம், சமுதாயம்,ஒழுக்கம் ஆகிய துறைகளில் மக்கள் நலமுற வாழ ஊக்கத்துடன் செயல்படுதல் உறுப்பினர்களிடையே நட்பும், நல்லுறவும், புரிந்து கொண்டு பழகும் பண்பு வளரச் செய்து ஒற்றுமையை மலர்வித்தல் பொதுமக்களை பாதிக்கும் பிரச்சனைகளை மனம் விட்டுப் பேசி கருத்து வழங்க ஏற்பாடு செய்தல் வேண்டும். ஆனால் கட்சி அரசியலும், பாகுபடுத்தும் மதமும் சங்க உறுப்பினர்களால் வாதிக்கப்பட மாட்டாது என்றார். சொந்த பண வருவாயை நோக்கமாக கொள்ளாமல், தொண்டுள்ளம் கொண்ட சமூகப்பணி செய்பவர்களை ஊக்குவித்தல், வாணிபம், தொழில், அரசுத்துறை, தனியார் முயற்சி ஆகியவற்றில் திறமையும், நெறிமுறைத் தரத்தையும் ஊக்கி வளர்த்தல் வேண்டும்.

இந்தியாவில் பன்னாட்டு அரிமா சங்கம் பெப்ரவரி 3, 1956 ஆம் ஆண்டு மும்பையில் நோசிர் என். பண்டோல் என்பவரைத் தலைவராக கொண்ட புதிய சங்கம் தொடங்கப்பட்டது. 1957ம் ஆண்டு அரிமா மாவட்டம் 304 தொடங்கப்பட்டு, பண்டோல் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 23.7.1957ல் தென்னகத்தில் முதன் முதலாக பெங்களூரிலும், பின்னர் 21.9.1957இல் சென்னையிலும் தொடங்கப்பட்டது. இந்திய தேசத்தை முழுவதும் உள்ளடக்கிய 304, கூட்டு மாவட்டம் 1973-74ல் 321,322,323,324 என்று பிரிக்கப்பட்டது என்றார்.

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசன தலைவர் முஹம்மது சஃபி, செய்லர் பிரசன்ன வெங்கடேஷ், பொருளாளர் ரங்கராஜன், சங்க நிர்வாக அலுவலர் விஜயகுமார், காளிதாஸ், முகமது ஜான், சந்திரசேகர், அப்துல்லா, கரண் லூயிஸ், பிளட் சாம், சரவணன், கோபால், அப்துல் அஜீஸ், குமார், கார்த்திக், லாவண்யா, சீனிவாசன், சம்சாத் பேகம், முஹமத், உமர் கத்தாப், பாஸ்கரன், உதயகுமார், சோனா பிரசன்னா, வழக்கறிஞர் இளமுருகு, சந்துரு, கணேசன், ஹேமலதா உட்பட பல அரிமா சங்க உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.