அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

செயற்கை கருத்தரிப்பு ஆஸ்பத்திரிகளை அலற வைக்கும் ‘அதர்ஸ்’

திருச்சியில் அடகு நகையை விற்க

நவம்பர் 07-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது  ‘அதர்ஸ்’. இதையொட்டி அக்டோபர் 30- ஆம் தேதி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசியவர்கள்….

இசையமைப்பாளர் ஜிப்ரான்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

“ஒரு புரொடக்ஷன் நிறுவனத்துடன் வேலை செய்வது எப்போதும் ஒரு புதிய அனுபவம். கிராண்ட் பிக்சர்ஸ் என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டனர். அபின் கதை சொன்ன போதே வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலிமையாக இருந்தது. ஹீரோ புதுமுகம் என்றாலும் செம்ம ஸ்மார்ட்டாகவும் அட்டகாசமாகவும் நடித்துள்ளார். கௌரி கிஷன், அஞ்சு குரியன் இருவரும் கதையின் முக்கியமான பாகங்கள். படம் நன்றாக வந்துள்ளது “.

இயக்குநர் அரவிந்த்

https://www.livyashree.com/

“நான் இயக்குநராக இல்லாமல், புரொடக்ஷன் அணியிலிருந்து இங்கு இருப்பது மகிழ்ச்சி. ஜிப்ரான் மியூசிக் என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ புதுமுகம் என்றாலும் மெச்சூர்டாக நடித்துள்ளார். நமக்கு புதிய ஹீரோக்கள் தேவை. இயக்குநர் அபின் மலையாளி என்றாலும், தமிழை கற்றுக்கொண்டு திரைக்கதை எழுதியுள் ளார்.முதல் படம் போலவே இல்லை, மிக அழகாக எடுத்துள்ளார். கௌரி கிஷன் மருத்துவராக சிறப்பாக நடித்துள்ளார். பிரதீப் புது ஹீரோவிடம் மிக அழகாக வேலை வாங்கியுள்ளார். ஜிப்ரான் எப்போதும் கதையின் உணர்வை இசையில் வெளிப்படுத்துவார். இதிலும் அதையே செய்துள்ளார்.”

அதர்ஸ்இணைத் தயாரிப்பாளர் ஆதிராஜ் புருஷோத்தமன்

“ஒரு நல்ல படம் மக்களிடம் செல்வதில் பத்திரிகையாளர்களின் பங்கு மிக முக்கியம். நாங்கள் ஒரு நல்ல படத்தை உருவாக்கி யுள்ளோம். உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறோம்”.

நடிகை கௌரி கிஷன்

“நான் ஹாஸ்பி டலில் இருந்தபோது அபின் சார் கதையைச் சொன்னார். அப்போது காட்சிகள் என் கண்முன் தோன்றியது. டீம் முழுவதும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது. கிராண்ட் பிக்சர்ஸ் மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளனர். ஆதித்யா புதுமுகம் போல இல்லை; மிகவும் நன்றாக நடித்துள்ளார். ஜிப்ரான் சார் இசை மிக சிறப்பாக உள்ளது. படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.”

 ஹீரோ ஆதித்யா மாதவன்

“ஒரு புதிய ஹீரோவான என்னை நம்பி இப்படத்தில் பெரிய வாய்ப்பு தந்த இயக்குநர் அபின் அவர்களுக்கு நன்றி. அதிலும் அறிமுக ஹீரோவுக்கு இரண்டு ஹீரோயின்களை வைத்தது அவரின் நம்பிக்கை. ஜிப்ரான் சார் இசை வருவது தெரிந்தவுடன் ரோட்டிலேயே டான்ஸ் ஆடினேன்! என்னை மிக அழகாக காட்டிய ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கிற்கு நன்றி. கௌரி, அஞ்சு குரியன் இருவரும் மிக நன்றாக இணைந்து நடித்தனர்”.

அதர்ஸ்இயக்குநர் அபின் ஹரிஹரன்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

“ஒரு வருட பயணத்திற்குப் பிறகு ‘அதர்ஸ்’ இன்று உருவாகியுள்ளது. நான் புதுமுக ஹீரோவையே தேடினேன், அதற்காக ஆடிஷன் நடத்தி ஆதித்யா மாதவனை தேர்ந்தெடுத்தோம் . அப்போது ஆடிஷனிலேயே அவர் அசத்தினார். கௌரி, அஞ்சு குரியன், ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பல அனுபவமுள்ள நடிகர்கள் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் சார் மிகப் பெரிய கேமராமேன் என்றாலும், எனது கற்பனையை திரையில் துல்லியமாக பதிவு செய்தார். ஜிப்ரான் சார் கதையின் உணர்வுகளை இசையில் உயிர்ப்பித்துள்ளார். ஆதித்யா கடின உழைப்பை தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்.”

தொழில் நுட்பக் குழு:

ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்

இசை: ஜிப்ரான்

பாடல்கள்: மோகன் ராஜன்

எடிட்டிங்: ராமர்

கலை இயக்கம்: உமா சங்கர்

நடிகர்கள் :

ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பெராடி, மாளா பார்வதி, ஜகன், ஆர். சுந்தர்ராஜன்.

தயாரிப்பு: கிராண்ட் பிக்சர்ஸ்

இணைத் தயாரிப்பு: அப்(UP) 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன்

 

—   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.