குடி நோயாளிகளுக்கு ‘பாட்டல் ராதா ‘ நல்ல மருந்து!
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் ‘பாட்டல் ராதா’ படம் வருகிற 24 -ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர், மிஷ்கின் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசியவர்கள் இயக்குனர் லிங்குசாமி
“இந்தப் படம் தமிழில் மிகச்சிறந்த படமாக இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒருபடமாக வந்திருக்கிறது. ஜனரஞ்சகமாக அதேசமயம் கருத்துள்ள படமாக இருக்கிறது.
இந்தப்படம் அரசாங்கத்திற்கு போடும் மனு போல . இந்தப்படம் பெரும் வெற்றியடையும்” இயக்குனர் அமீர் ” குடி நோயாளி களைப்பற்றி இனி யார் படம் எடுத்தாலும் அது பாட்டல்ராதா படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது “.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இயக்குனர் மிஷ்கின்
“பாட்டல் ராதா திரைக்கதை எழுதப்பட்ட விதம் மிகச்சிறப்பானது.
முதல் படத்திலேயே இவ்வளவு சிறப்பாக எழுதி எடுத்திருக்கும் இயக்குனர் தினகரன் சிவலிங்கத்திற்கு பாராட்டுக்கள். அதுவும் இப்படி ஒரு கதைகளத்தை எழுதியதற்கு என் பாராட்டுக்கள்.படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிப்பை பார்த்து வியந்துவிட்டேன். குறிப்பாக குருசோமசுந்தரம் நடிப்பில் மிரட்டிவிட்டார். மொத்தமாக படக்குழுவுக்கு என் அன்பும் பாராட்டும். இப்படிப்பட்ட படங்களை தயாரிக்கும் ரஞ்சித்துக்கு நன்றி “.
இயக்குனர் வெற்றிமாறன்
“இந்தப் ப்படம் நன்றாக எழுதி, மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். படத்தின் முதல் பாதி சிரிக்கவும், இரண்டாம் பாதி சிந்திக்கவும் வைக்கும். இப்போதைய காலகட்டத்திற்கு அதுவும் குடிக்கு அடிமையாகிவிட்ட இந்த சமூகத்திற்கு மிக அவசியமான படமாக வந்திருக்கிறது.
இந்தப்படம் உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்”.
இயக்குனர் &தயாரிப்பாளர் பா.இரஞ்சித்
“குடியால் பல குடும்பங்கள் அழிந்துபோனதை நான் கண்டிருக்கிறேன். இந்தக் கதையை என்னிடம் தினகரன் தரும்பொழுது அதிலிருந்த உண்மைத்தன்மை என்னை வெகுவாக ஆட்கொண்டது. வசனங்களும், வாழ்வும் , நமக்கு நெருக்கமான ஒரு உணர்வை தந்தது.
தினகரன் மிக அருமையாக இயக்கியிருக்கிறார். தொடர்ந்து இந்த தமிழ்சினிமாவில் அவசியமான படங்களை தரவேண்டும் என்பது நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் விருப்பம். இன்னும் நல்ல படங்கள் , பொழுதுபோக்கோடு சமூகக்கருத்துள்ள படங்களை தொடர்ந்து உருவாக்கிக்கொண்டேயிருப்போம்.
பாட்டல் ராதா உங்களை ரசிக்கவைப்பதோடு உங்களுக்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருக்கும்”.
— மதுரை மாறன்.