அங்குசம் சேனலில் இணைய

அங்குசம் பார்வையில் ‘படையாண்ட மாவீரா’  

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : விகே புரொடக்‌ஷன்ஸ் நிர்மல் சரவணராஜ், எஸ்.கிருஷ்ணமூர்த்தி. இணைத் தயாரிப்பாளர்கள் : வ.கெளதமன், குறளமுதன், உமாதேவன், கே.பாஸ்கர், கே.பரமேஸ்வரி. டைரக்‌ஷன் & ஹீரோ: வ.கெளதமன் மற்றும் பூஜிதா பொன்னடா, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு,  மன்சூரலிகான், மதுசூதன் ராவ், பாகுபலி பிரபாகர், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சாய் தீனா, கபீர்துஹான் சிங், தலைவாசல் விஜய். ஒளிப்பதிவு : கோபி ஜெகதீஸ்வரன், பாடல்கள் : கவிப்பேரரசு வைரமுத்து, இசை : ஜி.வி.பிரகாஷ்குமார், பின்னணி இசை : சாம்.சி.எஸ்., எடிட்டிங் : ராஜாமுகமது, பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.

வடமாவட்டங்களில் குறிப்பாக வன்னிய சமூக மக்களின் இளம் தலைவராக, அந்த மக்களுக்காக போராடிய போராளியாக, எம்.எல்.ஏ.வாக வாழ்ந்து மறைந்தவர் காடுவெட்டி ஜெயராமன் மகன்  குருநாதன் [ எ ] குரு. அந்த குருவின் வாழ்க்கை வரலாறு தான் இந்த திரைப்படைப்பு என ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லிவிட்டார் வ.கெளதமன்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

’படையாண்ட மாவீரா’
’படையாண்ட மாவீரா’

ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை திரையில் பதிவு செய்யும் போது, அதில் உண்மைச் சம்பவங்களுக்கு காட்சி வடிவம் கொடுப்பதற்காக கற்பனைகளைக் கலப்பதில் தப்பில்லை. ஆனால் இதில் சில பொய்களை உண்மைகளாகக் காட்ட முயற்சித்திருக்கிறார் வ.கெளதமன். குருவை மாவீரனாக காட்டுவதற்கான காட்சிகள் அவசியம் தான். அதில் தப்பொன்றும் இல்லை. ஆனால் அமைச்சர் ஒருவரின் வீட்டுக்குள் போய், கூலிப்படைகளுக்கு சவால்விட்டு, இரவு முழுவதும் அங்கேயே படுத்துறங்கி, காலையில் எழுந்ததும் கூலிப்படைத் தலைவனின் கன்னத்தில் குரு அறைவதெல்லாம் எந்த வகையில் சாத்தியம் என நமக்குப் புரியவில்லை.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ரஜினியே இந்த மாதிரி சீன்களை ரிஜெக்ட் பண்ணிவிடுவார். ஆனால் கெளதமன் ரொம்ப துணிச்சலாக இந்த சீனை கிரியேட் பண்ணியுள்ளார்.

 

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

‘படையாண்ட மாவீரா’ இன்னும் சொல்லப் போனால் படத்தில் குருவாக நடித்திருக்கும் கெளதமனின் ஸ்டண்ட் சீக்வென்ஸும் பெரும்பாலான காட்சிகளில் நடிப்பும் விஜயகாந்த்தை அப்படியே நினைவூட்டுகிறது. ஆனால் என்ன ஒரு கொடுமைன்னா… படத்தில் இவரையும் இளவரசுவையும் தவிர, மற்ற எல்லோருமே மிகை நடிப்பைக் கொட்டி நம்மை மூச்சுமுட்ட வைக்கிறார்கள். மேற்கு மண்டல ஐ.ஜி.யாக வரும் நிழல்கள் ரவி, “அவரு யாரு தெரியுமா? அவரை மக்களெல்லாம் மாவீரன்னு கூப்பிடுவாங்க தெரியுமா? அவரு போட்டோ எல்லா வீட்லயும் இருக்கும். அதனால் பார்த்து அவரை ஹேண்டில் பண்ணு” என புதிதாக பொறுப்பேற்கப் போகும் டி.எஸ்.பி. பாகுபலி பிரபாகருக்கு பாடம் நடத்துவது… என்ன தான் மாவீரன் வரலாறுன்னாலும் ஒரு நியாயம் வேணாம்யா?

ஆனால் பாருங்க அதற்கு முன்பே,  ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய் தீனாவும் அங்கேயிருக்கும் கான்ஸ்டபிள்களும் குருவுடன் மல்லுப்பாஞ்சு ஸ்டேஷனையே தரைமட்டமாக்குகிறார்கள். வாட்…ஏ….மிராக்கிள் சீன்.

‘படையாண்ட மாவீரா’ டி.எஸ்.பி. பாகுபலி பிரபாகர், வீரப்பனாக நடித்திருக்கும் ராக்கெட் ராஜா, நீதிபதியாக  நிழல்கள் ரவி, கலெக்டராக நடித்திருக்கும் அந்த நடிகர் உட்பட எல்லோருமே…. ஓவர் நடிப்பை அள்ளிக் கொட்டி நம்மை ரொம்பவே இம்சிக்கிறார்கள். சரண்யா பொன்வண்ணனும் சமுத்திரக்கனியும்கூட  இந்த ஓவர் நடிப்பைக் கொட்டிய பிறகு நாம் என்னத்த சொல்ல? வ.கெளதமன் மட்டும் அளவோடு நடித்து நம்மை ஆசுவாசப்படுத்துகிறார்.

கவிப்பேரரசுவின் பாடல்களுக்கு இதமாகவும் ஈரமாகவும் உணர்வாகவும் இசையமைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனா இந்த சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசை இருக்கே…அய்யய்யோ… சும்மாவே இன்ஸ்ட்ரூமெண்ட் மேல ஏறி உட்கார்ந்து நம்ம காதுகளை பஞ்சராக்குவார். இதில் அப்பப்ப “வீ…ரா…. மாவீரா…..மாவீரா…”னு போட்டு கண்ணு, காது, மூக்குல இருந்து ரத்தம் வரவச்சுட்டாரு சாம்.சிஎஸ்.

வன்னிய சமூக மக்களின் மாவீரனாக இருந்த குருவைப் பற்றிய நெகட்டிவ் இமேஜை மாற்றுவதற்காக சிரத்தையுடன் உழைத்து, மிகப்பெரிய புகழஞ்சலி செலுத்தியுள்ளார் வ.கெளதமன்.

 

   —    ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.