சூப்பர்ஸ்டார் ரஜினியின் வைரவிழா+ பொன்விழா மெகா கொண்டாட்டம்!
1999-ல் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘படையப்பா’ வை அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் , கே. சத்திய நாராயணா, எம். வி கிருஷ்ணா ராவ் மற்றும் கே. விட்டல் பிரசாத் ஆகியோர் தயாரித்தனர். இணைத் தயாரிப்பாளராக பி. எல். தேனப்பன் பணியாற்றினார்.
1999 ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியான ‘படையப்பா’ 200 திரையரங்குகளில் வெளியாகி 150 நாட்களைக் கடந்து, இந்தியளவில் மாபெரும் வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
இந்த டிசம்பர் 12- ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் 75- ஆவது பிறந்த நாள். எனவே அவரின் வைரவிழா கொண்டாட்டம்+ சினிமாவுக்கு அவர் வந்து 50 ஆண்டுகள் நிறைவு பொன்விழா கொண்டாட்டம் என இரு பெரும் கொண்டாட்டமாக தற்போதைய 4கே டெக்னாலஜியில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, நவீன ஒலி அமைப்புடன், புதுப் பொலிவுடன் ‘படையப்பா’ உலகமெங்கும் 100- க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகிறது.
— ஜெ.டி.ஆர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.