தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைப்பு நிகழ்வு
திருச்சி மாவட்டம் பொன்மலையில் உலக மண் தினத்தை (05.02.2024) முன்னிட்டு தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைகள் நடவு நிகழ்ச்சி செயல்படுத்தப்பட்டது.
மண் வளம் காப்போம், மனித உயிர் காப்போம் என்ற வாசகத்திற்கிணங்க மண் நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்றாகும். அவை நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, உணவுப் பொருட்களின் வளர்ச்சிக்கான முக்கியக் காரணியாக உள்ளன. மேலும், பல்வேறு உயிரினங்களின் தாயகமாகவும் உள்ளன.
மண்ணின் தரத்தை பராமரிப்பதும், மண்ணின் தரத்தை உறுதி செய்வதும் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். தொழில்மயமாக்கல் மற்றும் மோசமான நில மேலாண்மை அமைப்புகள் பல இடங்களில் மண்ணின் தரத்தை குறைத்து, மண் அரிப்பு, மண் வளம் குறைதல் மற்றும் பொருள் இழப்புக்கு வழிவகுக்கிறது.
மண்ணின் தரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அது நம் வாழ்க்கை மற்றும் உணவு முறையில் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்களுக்கு அறிவிப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.
மண் தினத்தை கொண்டாடும் விதமாக மாணவர்கள், மற்றும் நண்பர்கள் உடன் 200 மேற்பட்ட விதைகள் பொன்மலை மைதானம், பொன்மலைப்பட்டி பகுதியில் விதைக்கப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாரும்,தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், மக்கள் சக்தி இயக்க நிர்வாகி குமரன், ஜீவானந்தம், ஸ்ரீ, தமிழ்மாறன், வெங்கடேஷ், விக்னேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டடு இந்நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.
– அங்குசம் செய்திப்பிரிவு.