அங்குசம் சேனலில் இணைய

ஒன்பதே மாதத்தில் பெயர்ந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை ! கட்டுமானத்துக்கு அனுமதி கொடுத்த அரசு அதிகாரி யார் ?

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. ஒன்றாவது முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 34 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இரண்டு வகுப்பறை பள்ளியாக  இயங்குகிறது. இப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் உள்ள புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஒன்பது மாதங்களே ஆகிறது.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் செப்-22 அன்று காலையில் காலை உணவு திட்டத்திற்காக குழந்தைகளை வைத்துக் கொண்டு சாப்பாடு கொடுப்பதற்காக வகுப்பறை கட்டிடத்தை திறந்து  பார்த்த பொழுது மேற்கூரை இடிந்து விழுந்து மாணவிகள் உட்காரும் நாற்காலியில் கொட்டிக் கிடந்தன. வகுப்பறையில் இருந்த எல்இடி டிவி மீதும் மேற்கூரை இடிந்து விழுந்த சிமெண்ட் பூச்சுகள் விழுந்து கிடந்தன. வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து தலைமையாசிரியர் பூட்டிச் சென்ற நிலையில் சனி ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை காலை பள்ளியை திறக்கும் போது அசம்பாவித சம்பவம் நடந்தது தெரியவந்தது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிபள்ளி வகுப்பறையில் குழந்தைகள் இருக்கும் பொழுது இச்சம்பவம் நடந்திருந்தால் குழந்தைகள் அனைவரும் காயமடைந்து இருப்பார்கள். நல்வாய்ப்பாக பள்ளி துவங்கும் முன்பு இந்த அசம்பாவிதம் நடந்ததால், குழந்தைகள் காயம் இன்றி உயிர் தப்பினர். இப் பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு 9 மாதமே ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி”தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கட்டுமானப் பணிகளுக்காக கணிசமான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இதனை பயன்படுத்தி காண்ட்ராக்டில் கொள்ளை இலாபம் பார்க்க ஆசைப்படும் சில காண்ட்ராக்ட் காரர்களின் செயலால் ஒட்டுமொத்த அரசுக்கே அவப்பெயர் ஏற்படுவதாக அமைந்திருக்கிறது. காண்ட்ராக்ட் காரர்களை சொல்லி எந்த புண்ணியமும் இல்லை. சம்பந்தபட்ட காண்டிராக்டை ரத்து செய்தாலும், வேறொருவர் பெயரில் காண்ட்ராக்ட் எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிமாறாக, இதுபோன்ற தகுதியற்ற காண்ட்ராக்டர்களை அரவணைக்கும் அரசு அதிகாரிகளைத்தான் பொறுப்பாக்க வேண்டும். அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படிதான், தரமான பொருட்களைக் கொண்டுதான் இந்த பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது என்பதாக, எந்த அரசு அதிகாரி கள ஆய்வு மேற்கொண்டு சான்று அளித்தாரோ அந்த அதிகாரிகளை இந்த சம்பவத்துக்குப் பதில் சொல்லியாக வேண்டும். அவர்களது சம்பள பணத்திலிருந்து இக்குறைபாடு சரிசெய்யப்பட வேண்டும். மாறாக, மீண்டும் அரசு பணத்தை கொண்டே மராமத்து பணிகளை செய்ய அனுமதிக்கக்கூடாது.” என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக அமைந்திருக்கிறது.

 

   —      ஜோஷ்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.