196 கூடுதல் நடைகள்… 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு … பஞ்சப்பூர் அப்டேட்ஸ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து   முனையம்  09.05.2025  (வெள்ளி) அன்று   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்  திறந்துவைக்கப்பட்டது.

தற்போதுஇ 16.07.2025 புதன்கிழமை இன்று காலை 6 மணி அளவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் இப்பேருந்து முனையத்திலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மேலும் இப்புதிய ஒருகிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தினசரி  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி மண்டலம் மூலம் திருச்சி மாநகரின் முக்கிய நகர்ப்புற வழித்தடங்களான  பாலக்கரை, தில்லைநகர் , உறையூர், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், வயலூர், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவெறும்பூர், துவாக்குடி, ஆகிய வழித்தடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கேற்ப  பகல் மற்றும் இரவு நேரங்களில் போதுமான பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள்ப்பட்டுள்ளது.  இவ்வழித்தடங்களில்  அதிகாலை 3.00 மணி முதல் காலை 10.00 வரை தற்சமயம் இயக்கப்படும்  நடைகளை விட கூடுதலாக  196 நடைகள் அதிகரித்து இயக்கப்பட உள்ளது .

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

மேலும் இப்புதிய ஒருகிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தினசரி அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள்இ அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட முக்கிய நகரங்களான தஞ்சாவூர், கும்பகோணம், வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, இராமேஸ்வரம், சென்னை,  பெங்களூரு, நாமக்கல், சேலம், கரூர்,  கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், பழனி, குமுளி, மதுரை, திருச்செந்தூர், திருநெல்வ்வெலி, நாகர்கோவில், தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய மார்க்கங்களில் புறநகரப்பேருந்துகள் இயக்கம் செய்யப்படுகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இப்புதிய பேருந்து முனையத்தில் 24 மணி நேரமும் அலுவலர்கள் பரிசோதகர்கள் மற்றும் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டு பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சீரான பேருந்து இயக்கம் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இப்புதிய பேருந்து முனையத்தை நன்கு பயண்படுத்திக் கொள்ள  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட பேருந்து முனைய துவக்கவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆனையர் திருச்சிராப்பள்ளி மேயர் , மாநகரக் காவல் ஆனையர்,   சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், போக்குவரத்துக் கழக அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.