‘பறந்து போ’ படக்குழுவுக்கு சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மரியாதை!
ஜூலை 08-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ‘பறந்து போ’ படத்தின் சக்ஸஸ் & தேங்ஸ் கிவிங் மீட் நடந்தது . இதில் 71 ஆண்டு பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பாக அப்பட இயக்குநர் ராம் , நாயகன் மிர்ச்சி சிவா, நாயகி கிரேஸ் ஆண்டனி , பாடலாசிரியர் மதன் கார்கி , ஜியோ ஹாட் ஸ்டார் பிரதிப், குழந்தை நட்சத்திரம் மிதுல் ராயன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு சினிமா சங்கத்தின் கெளரவத் தலைவர் நெல்லை சுந்தர்ராஜன் , துணைத் தலைவர் ‘கலைமாமணி’ மணவை பொன். மாணிக்கம் செயலாளர் ஆர்.எஸ். கார்த்திக், செயற்குழு உறுப்பினர்கள் மதிஒளி ராஜா, மோகன் , விஜயலட்சுமி , ஹேமலதா , உறுப்பினர்கள் சிவாஜி , மைசிக்ஸர் விஜய் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
— மதுரை மாறன்