தண்ணீர் குடத்தில் மாட்டிக்கொண்ட இரண்டு வயது சிறுமி ! பெற்றோர்களே உஷார் !!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தண்ணீர் குடத்தில் மாட்டிக்கொண்ட இரண்டு வயது சிறுமி ! பெற்றோர்களே உஷார்!!

அகண்ட சில்வர் பாத்திரத்தில் கால் விட்டு விளையாடிய இரண்டு வயது சிறுமியின் இடுப்பு பாகம் வரையில் பாத்திரத்தில் மாட்டி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Srirangam MLA palaniyandi birthday

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் பூபதி கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி புத்தி பிரியா என்ற மனைவியும் இரண்டு வயதில் மிதுலா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் மிதுலா ஸ்ரீ வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் சில்வர் தண்ணீர் பாத்திரம் இருந்துள்ளது. மேற்படி பாத்திரத்தில் சிறுமி இறங்கி விளையாட முயன்ற போது எதிர்பாராத விதமாக மிதுலாஸ்ரீ உள்ளே மாட்டிக்கொண்டார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

குழந்தை
குழந்தை

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

பாத்திரத்தில் இருந்து வெளியே வர முடியாமல் கதறி அழுது சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் குழந்தை சில்வர் பாத்திரத்தில் மாட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை மீட்க போராடி முயன்று பார்த்து அருகில் உள்ள நாட்றாம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பாத்திரத்தில் மாட்டி இருந்த குழந்தையை வெளியே எடுக்க முயன்றனர். பலனளிக்கவில்லை

பின்னர் கட்டிங் எந்திரத்தை கொண்டு பாத்திரத்தை பக்கவாட்டில் வெட்டி பிளந்து சிறு கீறல் இன்றி சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

சிறு குழந்தைகளின் துடுக்குத்தணத்தை ரசித்து பழகும் பெற்றோர்கள்., குழந்தைகள் எளிதில் அணுக முடியாத அளவுக்கு இது போன்ற பொருட்களை வைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருக்கிறது இந்த சம்பவம்.

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுவது; மின் சாதன பொருட்களில் கை வைப்பது; கூர்மையான காயங்கள் உண்டாக்கும் பொருட்களுடன் விளையாடுவது… என குழந்தைகள் வளர்ப்பில் தேவை முன் எச்சரிக்கை! தேவை போதுமான விழிப்புணர்வு!!

– மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.