மகளை காதலித்த இளைஞரை கழுத்து அறுத்து கொலை செய்த பெற்றோர் !

0

மகளை காதலித்த இளைஞரை கழுத்து அறுத்து கொலை செய்த பெற்றோர் !

தேனி மாவட்டம், பூதிப்புரம் வீருசின்னம்மாள்புரத்தைச் சேர்ந்த சரவணன் மகன் கமலேஸ்வரன்(18). இவர் கடந்த ஆண்டு பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1தேர்வு எழுத வந்த போது மாணவி பிருந்தாவுடன் (18) பழக்கம் ஏற்பட்டது.

2 dhanalakshmi joseph
கமலேஸ்வரன்.

இவர்களின் காதல் பிருந்தாவின் அப்பா சன்னாசிக்குத் தெரிந்ததால் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் தனது மகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அழிக்க வேண்டும் என்று கூறி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி கமலேஸ்வரனின் மொபைலை பறித்துச் சென்றார்.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

மேலும், தனது மகளுடன் தொடர்பு வைத்தால் கொலை செய்து விடுவோம் என்று தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இருப்பினும் கமலேஸ்வரன், பிருந்தாவுடன் பழகி வந்துள்ளார்.

இதனால், மார்ச் 16-ஆம் தேதி பிருந்தாவின் தந்தை சன்னாசி, தாய் தமிழ்ச்செல்வி ஆகியோர் கமலேஸ்வரன் வீட்டுக்கு சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இருப்பினும் இருவரின் பழக்கம் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் கடந்த14-ஆம் தேதி டூவீலரில் சென்ற கமலேஸ்வரன் வீடு திரும்பவில்லை. 15-ஆம் தேதி காலையில் பூதிப்புரம் தோட்டத்து கிணற்றுமேடு பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

கமலேஸ்வரனின் தாய் ஊஞ்சம்மாள் புகாரின் பேரில் சன்னாசி, தமிழ்ச்செல்வி ஆகியோரை பழனிசெட்டிபட்டி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

– ஜெ.ஜெ.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.