17 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி+ மோகன்லால் = ‘பேட்ரியாட்’
இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக இருக்கும் ‘பேட்ரியாட்’- படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அட்டகாசமன போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. மகேஷ் நாராயணன் இயக்கத்தில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி மோகன்லால் இணைந்து மிரட்டும் இப்படம் வருகிற ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
‘பேட்ரியாட்’ தமிழ் போஸ்டரை அட்லீ, தெலுங்கு போஸ்டரை விஜய் தேவரகொண்டா , ஹிந்தி போஸ்டரை கரண் ஜோகர் வெளியிட்டனர். மலையாளத்தில், துல்கர் சல்மான், பிரித்விராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, உன்னி முகுந்தன், பாசில் ஜோசப், ஜெயசூர்யா, சன்னி வேய்ன், நஸ்லென், நஸ்ரியா நசீம், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் வெளியீட்டு தேதி போஸ்டரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தப்படத்தை அன்டோ ஜோசப் மற்றும் கே.ஜி. அனில்குமார் தயாரித்துள்ளனர். இணைத் தயாரிப்பாளர்களாக சி.ஆர்.சலீம் புரொடக்சன்ஸ் & ப்ளூ டைகர்ஸ் லண்டன் நிறுவனங்களின் சி.ஆர். சலீம் மற்றும் சுபாஷ் ஜார்ஜ் மானுவல் செயல்பட்டுள்ளனர். நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: சி.வி. சாரதி மற்றும் ராஜேஷ் கிருஷ்ணா.
*ஆர்டிஸ்ட்ஸ்*
மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், ராஜீவ் மேனன், ரேவதி, ஜினு ஜோசப், டானிஷ் ஹுசைன், ஷஹீன் சித்திக், சனல் அமன், தர்ஷனா ராஜேந்திரன், செரீன் ஷிஹாப், பிரகாஷ் பெலவாடி.
டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களுக்குப் பிறகு, இயக்குநர் மகேஷ் நாராயணன் ‘பேட்ரியாட்’ படத்தை சர்வதேச அளவிலான ஸ்பை த்ரில்லர் படமாக, விரிந்த களத்துடன் மற்றும் நவீன தொழில்நுட்ப தரத்துடன் உருவாக்கியுள்ளார். இந்தியா, இலங்கை, லண்டன் அஜர்பைஜான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 2024 நவம்பரில் இலங்கையில் தொடங்கிய படப்பிடிப்பு, இந்தியாவில் டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொச்சி போன்ற முக்கிய நகரங்களில் நடைபெற்றது.
*தொழில் நுட்பக் குழு*
ஒளிப்பதிவு: மனுஷ் நந்தன்
இசை: சுஷின் ஷியாம்
எடிட்டிங்: மகேஷ் நாராயணன், ராகுல் ராதாகிருஷ்ணன்
கலை இயக்கம்: ஷாஜி நடுவில், ஜிபின் ஜேக்கப்
ஸ்டண்ட்: திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா, மாஃபியா சசி, ரியாஸ் ஹபீப்
உடை வடிவமைப்பு: தன்யா பாலகிருஷ்ணன்
நடனம்: ஷோபி பவுல்ராஜ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
— ஆண்டவா்








Comments are closed, but trackbacks and pingbacks are open.