நீதிபதியை யூடியூப் சேனலில் விமர்னம் செய்த பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது !
நீதிபதியை யூடியூப் சேனலில் விமர்னம் செய்த பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது !
கும்பகோணத்தில் பிறந்தவர் பத்ரி சேஷாத்ரி. இவர் கிழக்கு பதிப்பம் நடத்தி வருகிறார். வலதுசாரி சிந்தனையார் என்று தொலைக்காட்சி விவாதங்களில் கலந்த கொள்வது வழக்கம். இதே போன்று நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவிப்பார்.
சமீபத்தில் மணிப்பூர் வன்முறை, மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார். மணிப்பூர் கொலை பற்றியும் , அது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி பற்றியும் , நீதிமன்றம் அறிவில்லாமல் நடக்கிறது என யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்ததற்காக வழக்கறிஞர் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுத்துள்ளனர். எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி இன்று மூன்று சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 29.07.2023 அதிகாலையில் பெரம்பலூர் குன்னம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பதிப்பாளர் பத்ரிசேஷாதிரி கைதுக்கு தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.