வருசநாடு அருகே அதிமுக முக்கிய பிரமுகர் கொலை முயற்சி ?

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

வருசநாடு அருகே அதிமுக முக்கிய பிரமுகர் கொலை முயற்சி ? காவல்துறை அதிகாரிகள் விசாரணை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, வருசநாடு அருகே முருக்கோடை கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும் க.மயிலாடும்பாறை முன்னாள் யூனியன் சேர்மன் முறுக்கோடை ராமர் வீட்டில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணிக்கு வீட்டில் தனியாக ராமர் தூங்கிக் கொண்டிருந்தார்,

செம்ம சூப்பரான திரைப்படம்..

அப்பொழுது இரண்டுக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வீட்டில் மின்சாரத்தை நிறுத்தி விட்டு கொலை செய்யும் நோக்கத்தோடு கயிறுடன் ராமரின் கழுத்தை பிடித்து நெரித்து கொலை செய்வதற்கு முயற்சி செய்து உள்ளார், இதனால் சண்டையிட்டு கூச்சிலிடவும் தப்பி ஓடிச் சென்றனர்.

5

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அந்த மர்ம நபர்களை பின் துரத்தி சென்றுள்ளார்கள். ஆனாலும் தலைமறைவாகிவிட்டதால் இதனை தொடர்ந்து வருசநாடு காவல் நிலையத்தில் முருக்கோடை ராமர் புகார் மனு ஒன்றை அளித்தார்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

இதனைத் தொடர்ந்து கடமலைக்குண்டு காவல்துறை ஆய்வாளர் சரவணன், காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் ராமசாமி கருப்பையா ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியா அல்லது வீட்டில் கொள்ளை அடிக்கும் நோக்கத்தோடு மர்ம நபர்கள் வந்தார்களா என பல கோணங்களில் காவல்துறை அதிகாரிகள் தனிபடை அமைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக பிரமுகர் முருக்கோடை ராமர் கொலை முயற்சி செய்யப்பட்ட சம்பவம் வருசநாடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

6
Leave A Reply

Your email address will not be published.