பிஸியோதெரபி படித்தவர் டாக்டரா ?
இவர் தொடர்ந்து மக்களுக்கு ஒரு தவறான கருத்தை பரப்பி வருகிறார். அதுகுறித்து ஊடகங்கள் விவாதிக்கவே இல்லை. அதாவது, பிஸியோதெரபி படித்த இவர், தன்னை ஒரு டாக்டர் என சொல்லிக்கொள்கிறார்.
பிஸியோதெரபி படித்தவர்கள், பிஸியோதெரபிஸ்ட்தான். டாக்டர்கள் அல்ல. ஒருவேளை, இதில் பி.ஹெச்.டி. முடித்தால் டாக்டர் என சொல்லிக்கொள்ளலாம். அப்படியென்றால்கூட, அதன் அர்த்தம் முனைவர் தான்.

ஏற்கனவே, தங்களை டாக்டர் என அங்கீகரிக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்கள். ஆனால், மத்திய- மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளவில்லை.
மற்றபடி, வ்யூஸுக்காக திவாகரை அழைத்து ஃபேமஸ் ஆக்கிய யூட்யூப்களை திவாகர் பயன்படுத்திக்கொள்கிறார். அந்த பங்காளி பஞ்சாயத்து குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
— மனோ