பாலியலில் பாதிக்கப்பட்ட மைனர் குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தி செய்தி வெளியிட்ட 2 தொலைக்காட்சிகள், 2 பத்திரிகைகள் மீது போக்ஸோ வழக்கு பதிவு !
பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மைனர் குழந்தைகளின் பெயரையோ, அவர்கள் வசிக்கும் இடத்தையோ, அவர்கள் படிக்கும் பள்ளியை அவர்கள் உறவினர் முறையையோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊடகங்கள் வெளிப்படுத்தக்கூடாது, மீறி வெளிப்படுத்தினால் செய்தி வெளியிட்ட ஊடகம் மீது போஸ்சோ வழக்கு பதியலாம் என்கிற சட்டம் உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் திருச்சியில் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட நிறுவனங்கள் மீது திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு அலகு கொடுத்த புகாரின் அடிப்படையில் News18, புதிய தலைமுறை உள்ளிட்ட 2 தொலைக்காட்சிகள், மனிதவிடியல், லால்குடி மாத பத்திரிகை உள்ளிட்ட 2 பத்திரிகைகள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சைபர் கிரைம் போலிசார் உதவியுடன் மேலும் இதே போன்ற செய்தி வெளியிட்ட மேலும் சில தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், டிஜிட்டல் ஊடகங்கள் 1 news nation, Trichymail
Update 360 , Dinamalar web வெளியான செய்திகளை வெளியிட்ட செய்தியாளர்கள் குறித்து விபரங்களை அனைத்து மகளிர் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
பாலியலில் பாதிப்புக்குள்ளான குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தி தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் செய்தி வெளியானவுடன் திருச்சி குழந்தை நலக் குழு சார்பாக உடனே செய்திகளை நீக்குமாறு ஆடியோ பதிவு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.