21 கிலோ கஞ்சா டூவீலரில் கடத்தி வந்த கஞ்சா கடத்தல் மன்னன் கைது !
ரூ.2 லட்சம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா பறிமுதல் – முக்கிய குற்றவாளி கைது.
திருச்சியை அடுத்த ராம்ஜிநகரில் வாகனச் சோதனையின்போது ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சாவை, ஆய்வாளர் வீரமணி தலைமையிலான போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில் 14 வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கொத்தமங்கலத்தை சேர்ந்த மதன்(எ)மதுபாலான் கைது செய்யப்பட்டுள்ளான்.
திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அடுத்த திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அருகே காவல் ஆய்வாளர் வீரமணி, உதவி ஆய்வாளர் வினோத்குமார் தலைமையில் காவலர்கள் ராமமூர்த்தி, நல்லையன், வியஜ்ராகவன் ஆகியோர் ராம்ஜிநகர் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இருச்சக்கர வாகனத்தினை போலீஸார் தணிக்கை செய்தபோது அதில் மூட்டைகளில் இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து அந்த நபரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கோண்ட நிலையில், 21 கிலோ கஞ்சா ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்டது என்பதும், இருச்சக்கர வாகனத்தில் கடத்தி வந்த நபர் 14 வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சின்ன கொத்தமங்கலத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் மதன்(எ)மதுபாலான்(29) என்பதும் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து மதன்(எ)மதுபாலானை கைது செய்துள்ள ராம்ஜிநகர் போலீஸார், அவனிடமிருந்து இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.