அங்குசம் சேனலில் இணைய

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்.08/17, U/s 7 r/w 8 of POCSO Act வழக்கில் 15 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை தூத்துக்குடி மாவட்டம், சின்னமணி நகரை சேர்ந்த யோகபிரகாஷ் 28/25 த.பெ பழனிசாமி என்பவர் திருச்சி, முசிறி தாலுகா, ஆமூர், மணப்பாளையம், காந்தி நகரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்த போது பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் மேற்படி வழக்கானது திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

யோகபிரகாஷ்
யோகபிரகாஷ்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி. சுமதி ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் (19.06.2025) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி  முத்துகுமரன் அவர்கள் மேற்படி வழக்கின் எதிரி யோகபிரகாஷ் 28/25 த.பெ பழனிசாமி என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா மற்றும் நீதிமன்ற காவலர் பிரியங்கா ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.