விதையாகிப்போன கவிஞர் தணிகைச்செல்வன் அவர்களுக்கு வீர வணக்கம்.
“இளைஞர்கள் நாங்கள் இருபதுகோடி
இந்திய நாட்டின் இருதயநாடி”
1980 களில் கவிஞர் தணிகைச்செல்வன் அவர்களின் இடி முழக்கம்!
2010 ஆம் ஆண்டு தனியார் பள்ளிகளின் சுரண்டலை எதிர்த்துப் பெற்றோர்கள் கிளர்ந்தெழுந்தப் போது, அவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்க ஒரு கவிதை எழுதித் தர வேண்டும் என்ற கோரிக்கையை கவிஞர் தணிகைச்செல்வன் அவர்களிடம் முன்வைத்தோம்.
“நான் எப்போது கவிதை எழுதினேன். முழக்கங்கள் தான் எழுதுவேன். அதற்கு மக்கள் கவிதை என்ற அங்கீகாரம் தருகிறார்கள். எழுதி அனுப்புகிறேன்” என்று கூறினார்.
பெற்றோர் போராட்டத்தை, அவர்களின் கோரிக்கைகளை முழுமையாக உள்வாங்கி:
“கல்வியைப் பெறுதல் குடிமக்கள் உரிமை!
கல்வியைத் தருதல் அரசின் கடமை!
கல்வி என்பது சமூக உடைமை!
கல்வியை விற்பது சமூகக் கொடுமை!”
என்று தொடங்கும் நீண்ட கவிதையை எழுதி அனுப்பினார்.
பெற்றோர் ஆர்பாட்டத்திற்கான தீக்கதிர் விளம்பரத்தில் கவிஞர் தணிகைச்செல்வன் கவிதை முழுமையாக இடம் பெற்றது.
தொழிலாளர் வர்க்கமாக மக்களை அணிதிரட்ட முயன்றவர்.
கவிஞர் தணிகைச்செல்வன் அவர்களின் கவிதைகள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. இளைஞர்களை அநீதிகளைக் கண்டு கொதித்தெழ வைக்கிறது.
தமிழ் உள்ளவரை கவிஞர் தணிகைச்செல்வன் புகழ் நிலைத்திருக்கும்.
தோழர் கவிஞர் தணிகைச்செல்வன் அவர்களுக்கு செவ் வணக்கம்! வீர வணக்கம்!
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை