போலிஸ் குடும்பத்தினரின் அடாவடி !
போலிஸ் குடும்பத்தினரின் அடாவடி !
வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த பயிற்சி காவலர் ஒருவர், தன்னை சக காவலர் தாக்கிவிட்டதாகக் கூறி பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.. சென்னை காவல்துறையில் பணிபுரிந்து வரும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அத்துமீறி பயிற்சி பள்ளியில் நுழைந்து அங்கு பயிற்சி பெற்றுக்கொண்டு இருந்த பெண் காவலர்களைத் தாக்கி உள்ளனர். அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளையும் ஆபாசமாக பேசியுள்ளனர்.
மேலும், தங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி, நாங்கள் அனைவரும் காவல்துறையில் பணியாற்றி வருகிறோம். எங்களது உறவினர் காவல்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து நாங்கள் அவர்களுக்கு தெரிவித்தால் உங்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்று கூறி மிரட்டியுள்ளனர். இதுகுறித்த வீடியோவை காவல்துறை உயரதிகாரிகளுக்கு பயிற்சி பள்ளி அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
அவர்களும், புகார் தெரிவித்து நடவடிக்கை எடுகு;க வேண்டும் என்று உத்தரவிட்டார்களாம். ஆனால் அதற்குள் உயரதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டு, இருதரப்பினர் மீதுதான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஒரு தரப்பினர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். இதனால் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது சக பயிற்சி காவலர்களையும், பயிற்சி பள்ளி அதிகாரிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.