சென்னையில் தடை செய்யப்பட்ட மாவா குட்கா உள்ளிட்ட 1164 பெட்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்…
சென்னையில் தடை செய்யப்பட்ட மாவா குட்கா உள்ளிட்ட 1164 பெட்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்…
சென்னை தலைமைச் செயலககாலனி குடியிருப்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், மாவா மற்றும் குட்கா ஆகிய பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் அங்கு விரைந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்தபோது தடை செய்யப்பட்ட ஆன்ஸ் குட்கா உள்ளிட்ட 1164 கட்டிகளை பறிமுதல் செய்தனர்…
இந்த சம்பவத்தில் ஓட்டேரி சேர்ந்த மாரீஸ்வரன், நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த சோலைராஜன், சிவகாசியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்…
தடை செய்யப்பட்ட மாவா, குட்கா மற்றும் ஹா ன்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை மொத்தமாக பதுக்கி வைத்து சென்னையில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்ய வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மேலும் யார் யார் இந்த பகுதியில் விற்பனை செய்து வருகிறார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது…