வாழ்த்துக் கூறும் பதிவல்ல இது !

0

வாழ்த்துக் கூறும் பதிவல்ல இது!
உங்கள் திருமணத்தை வழிமொழியும் பதிவு!

ஒரே ஒரு சின்ன வாட்ஸ் அப் செய்தி போதுமானது – நீ அழைக்காமலே 50 தொலைகாட்சி சேனல்கள் உன் திருமணத்தை நேரலை செய்ய ஓடோடி வந்திருப்பார்கள்!

நூற்றுக்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் குவிந்திருப்பார்கள்!

இந்த இடத்திற்கு சென்றால் நமக்கும் நல்ல விளம்பரம் என்றால், ஏராளமான வி ஐ பிக்களும்,ஏன் வி வி ஐபிக்களே கூட வரிசைகட்டி வந்திருப்பார்கள்!

 

நான், நீ என்று விதவிதமான பரிசு பொருட்களை,,மொய்ப்பணத்தை கொண்டு வந்து குவித்திருப்பார்கள்!

விளம்பரங்கள் முக்கியமல்ல, விழுமியங்களே முக்கியம் என்று வாழும் தெளிவு இன்று துறவிகளாகச் சொல்லப்படுபவர்களிடம் கூட இல்லை.

ஏனெனில், காஞ்சி மகா பெரியவர் என்று அழைக்கப்பட்டவரின் பிறந்த நாள் விழாவிலே கூட அவர் தலை மீது தங்க காசுகளை அபிஷேகம் செய்ததை படமெடுத்து இருக்கிறேன் நான்!

சேனல்களில் முகத்தை காட்டி பேசுவதே பெரிய சேவை என கருதும் பல சமூக சேவகர்கள் மத்தியிலே, ஆயிரம் பேச்சுகளை விட செயல்பாடுகளே முக்கியம் என வாழ்வதன் மூலம் உணர்த்துகிறாய்!

இந்த எல்லா சிறப்புகளுக்கும் உன்னை வளர்த்தெடுத்த தந்தை ஆனந்தன் அவர்களும், உன்னை பெற்ற தாயுமே முக்கிய காரணம் என்பதால் அவர்களை கைகூப்பித் தொழுகிறேன்.

திருமண உறுதி ஏற்பில், ’’சொந்த நலன்களை விட சமுதாய நலன்களே முக்கியம்’’ என தந்தை சொல்ல நீங்கள் இருவரும் உறுதி ஏற்றதை கண்டு நெஞ்சம் விம்மியது! எதிர்காலம் குறித்த நம்பிக்கை பிறந்தது!

இந்த சந்தோஷத்தை விட என்னைப் போன்றவர்களுக்கு வேறென்ன வேண்டும்?

வாழ்க மகளே!, வாழ்க மகனே!
நீவீர் பல்லாண்டு! பல்லாண்டு!

 

முநூலில்  – சாவித்திரி கண்ணன்

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.