அடுத்தடுத்து தொடர் மரணம்? அச்சத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவலர்கள் !
அடுத்தடுத்து தொடர் மரணம்? அச்சத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவலர்கள் ! திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் அடுத்தடுத்து காவலர்கள் விபத்துகளாலும் தற்கொலையாலும் பலி ஆகி வருவதால் காவலர்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் மே-9 ந்தேதி நாட்றம்பள்ளி அருகே கல்லாறு பகுதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாணியம்பாடி மதுவிலக்கு பிரிவு முதல் நிலை காவலர் (சேலம் பகுதியை சேர்ந்த) ஆறுமுகம் என்பவர் விபத்தில் பலியானார்.
வாணியம்பாடி அடுத்த 102 ரெட்டியூர் கிராமத்தில் பெண் காவலர் புவனேஸ்வரி என்பவர் மே-4 ந்தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. செய்துகொண்டார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணி புரிந்து வந்தவர். இவருக்கு திருமணமாகி ஓர் ஆண்டு ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்றம்பள்ளி அருகே ஏப்ரல்-28 அன்று இருசக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய காவலர் அண்ணாமலை வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆம்பூர் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் பரிமளா. இவர் ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். ஏப்ரல்-17 ,சம்பவத்தன்று கணவர் தட்சணாமூர்த்தி உடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது மாதனூர் – ஒடுகத்துர் செல்லும் சாலையில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் பழுதாகி நின்ற லோடு ஆட்டோ திடிரென தட்சணா மூர்த்தி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த லாரியின் பின் சக்கரத்தில் பரிமளாவின் தலை நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அடுத்தடுத்து உயிரிழந்த காவலர்கள் குடும்பத்தினர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 நாட்களில் காவலர்கள் அடுத்தடுத்து விபத்துகளிலும் தற்கொலையிலும் மரணம் அடைந்து வருவதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் அச்சத்திலும் அதிர்ச்சியிலுய் உறைந்து போய் உள்ளனர்.