கந்து வட்டி வசூலில் திக்குமுக்காடும் காவல் நிலையங்கள்
மாமூல், கந்து வட்டி வசூலுக்கு புரோக்கர்
கந்து வட்டிக்கார்களை பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்த நிலை மாறி, குமரி மாவட்த்தில் காவல்துறையில் உள்ளவர்களே கந்து வட்டிக்கு பணம் கொடுத்துள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர்கள் சிலர், நேரடியாக கொடுத்தால் சிக்கி விடுவோம் என்ற பயத்தில் புரோக்கர்களை வைத்து கந்து வட்டிக்கு பணம் கொடுத்துள்ளனர். ஒரு புறம் கந்து வட்டி வசூல், மறுபுறம் மாமூல் வசூல் வேட்டை என சில காவலர்களும் கொண்டாட்டமாக இருக்கிறார்களாம். இவற்றையெல்லாம் எஸ்.பி.யின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டியவர்களே கறை படிந்த கரங்களுடன் இருப்பதால், அவர்களும் தங்களது பங்கிற்கு செய்ய வேண்டியதை செய்து வருகிறார்களாம். மொத்தத்தில் கந்து வட்டி வசூல், மாமூல் வேட்டையில் சில காவல் நிலையங்கள் திக்குமுக்காடி வருவதாக பேசிக்கொள்கிறார்கள்.