பொல்லாத திருஷ்டி கண் திருஷ்ட்டியாமே..! பூங்குன்றன் – ஜெயலலிதா உதவியாளர்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பொல்லாத திருஷ்டி கண் திருஷ்ட்டியாமே..! பூங்குன்றன் – ஜெயலலிதா உதவியாளர்

பொல்லாத திருஷ்டி கண் திருஷ்ட்டியாமே..! கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்கிறார்களே? இதெல்லாம் உண்மைதானா? பேரவை செயலாளர் தயாளன் அவர்கள் என்னிடம் அடிக்கடி சொல்வார், நீங்கள் அம்மாவுடன் பயணிப்பதால் நல்ல வாயில் விழுவதை விட நாரவாயில்தான் அதிகமாக விழுந்து கொண்டிருப்பீர்கள். இறை வழிபாட்டை விடாதீர்கள் என்று..! பெரியவங்க சொன்னால் சும்மாவா..! எல்லாம் உண்மைதான் என்பதை அடுத்தடுத்து அனுபவங்கள் உணர்த்திக் கொண்டே வருகின்றன.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

நான் நிறைய கோயில்களுக்கு சென்று வந்தேன். அதை பதிவாகவும் போட்டு வந்தேன். அப்போது நண்பர் ஒருவர் சொன்னார், நீங்கள் போகிற கோயில்களை பற்றி ஏன் வெளியில் சொல்லுகிறீர்கள். அது யாருக்கும் தெரியாமல் இருப்பதே நல்லது என்றார். அப்போது நான் கேட்கவில்லை. அதன் பிறகு கோயில்களுக்கு செல்வதே குறைவானது. அப்போதும் எனக்குப் புரியவில்லை.

சமீபத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு பத்து கிலோமீட்டர், பத்து கிலோமீட்டர் என்று அழுத்தி அழுத்தி பதிவு போட்டேன். இப்போது முதுகு வலி காரணமாக நடக்க முடியாமல் அவதிப்படுகிறேன். அப்போது பத்து கிலோமீட்டரா? பத்து கிலோமீட்டரா? என்றார்கள். எனக்கு புரியவில்லை. இப்போது புரிகிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

உங்களுடைய செயல்களை உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் பாராட்டுவார்கள் என்று பதிவிட்டால் அதிகமானவர்கள் பொறாமைதான் பட்டிருக்கிறார்கள் போல..!

பாராட்டுகின்ற மக்கள் குறைந்து பொறாமைப் படுகின்ற மக்கள் அதிக எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கலிகாலத்திற்கான வயது அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

எனவே உங்கள் சார்ந்த விஷயங்களை அடுத்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிடாதீர்கள். ஜாக்கிரதை..!

– பூங்குன்றன் – ஜெயலலிதா உதவியாளர்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.