சர்ப்ரைஸ் விசிட் அடித்த கல்வி அமைச்சர் – சமாளித்து அனுப்பிய துறை அதிகாரிகள் !

0

திருச்சி மாவட்டம், துறையூரில் மதுராபுரியில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்தார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி. திடீரென வந்த அமைச்சரைக் கண்டு திடுக்கிட்ட கல்வித்துறை அதிகாரிகள் சமாளித்துக்கொண்டு கல்வி அமைச்சரை வரவேற்றனர்.

கல்வி அமைச்சர் விசிட்
கல்வி அமைச்சர் விசிட்
2 dhanalakshmi joseph

துறையூர் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் தற்போதைய நிலை குறித்தும், மாதந்தோறும் நடக்கக்கூடிய பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் அதில் பெற்றோர் வைக்கப்படும் கோரிக்கைகள் , காலை உணவு திட்டம் செயல்பாடு, பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பள்ளிகள் தோறும் உள்ள புகார் பெட்டிகளில் உள்ள மனுக்கள் மீது உடனுடக்குடன் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கல்வித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் மகேஸ்பொய்யாமொழி கேட்டறிந்தார்.

கல்வி அமைச்சர் விசிட்
கல்வி அமைச்சர் விசிட்
- Advertisement -

- Advertisement -

அமைச்சரின் கேள்விகளுக்கு பதிலளித்த வட்டாரக் கல்வி அலுவலர் மார்ட்டின் , தங்களுக்கு தனியாக அலுவலகம் தேவை என்ற கோரிக்கை வைத்தார். விரைவில் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். வட்டாரக் கல்வி அலுவலகத்தில் அலுவலர்களின் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்த அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

துறையூருக்கு திடீரென அமைச்சர் வந்த விஷயம் தெரிந்த மதுராபுரி ஊராட்சி பகுதி பொதுமக்கள் சிலர் அமைச்சர் அருகிலுள்ள மதுராபுரி ஊராட்சி நடுநிலைப் பள்ளியை மட்டுமாவது பார்வையிட்டிருக்கலாம் எனக் கூறினர்.

மதுராபுரி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மதுராபுரி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
4 bismi svs

மதுராபுரி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்கள் சேர்க்கை கூடுதலாக உள்ளதால் போதுமான வகுப்பறைகள் இன்றி மாணவர்கள் சிரமப்படுவதாகவும், மாணவ, மாணவிகளுக்கு ,குறிப்பாக மாணவிகளுக்கு உள்ள சுகாதார வளாகம் மாணவர்களுக்கு உள்ள ஒரே இடத்தில் உள்ளதாகவும், அதன் அருகிலேயே மாடி வீடுகள் உள்ளதால், மாணவிகளுக்கு என உள்ள கழிப்பறை மேல்புறம் திறந்தபடி உள்ளதால் இயற்கை உபாதைகளுக்காக கழிப்பறை செல்ல முடியாமல், பெரிதும் அவதிப்படுகின்றனர்.

அதன் அருகிலேயே சத்துணவுக்கூடமும் அமைந்துள்ளது. அதில் தான் மாணவ, மாணவிகளுக்கு உணவு தயார் செய்யப்படுகிறது. கழிப்பறை அருகிலேயே உணவுக் கூடமும் அமைந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

மதுராபுரி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மதுராபுரி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

மேலும் 1 ,2 -ம் வகுப்புகள் மதுராபுரி பள்ளியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் உள்ளதால் , சைக்கிளில் மாணவர்களுக்கு உணவு எடுத்துச் சென்று கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், இதேபோல் துறையூர் வட்டாரத்தில் உள்ள ஒரு சில அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாக உள்ள நிலையில் ,  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி துறையூர் பகுதியில் உள்ள ஏதாவதொரு பள்ளியை பார்வையிட்டிருக்கலாம் அல்லது அருகிலேயே உள்ள மதுராபுரி அரசு பள்ளியைக் கூட நேரில் சென்று ஆய்வு செய்யாமல் சென்று விட்டார் என அந்தப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அங்கலாய்த்துக் கொண்டனர்.

மாணவ, மாணவிகளின் கழிப்பறைகள் அருகருகே இருப்பதும், அவற்றின் அருகிலேயே சத்துணவு சமைக்கும் உணவுக் கூடமும் உள்ளது . மேலும் மாணவிகள் பாத்ரூம் மேல் பகுதி திறந்த நிலையில் உள்ளது. பக்கத்தில் மாடி வீடு உள்ளதால் மாணவிகள் பாத்ரூம் செல்ல முடியாமல் உடல் நிலை பாதிப்படைவதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு .

மதுராபுரி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மதுராபுரி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

மேலும் 13.03.2023  ப்ளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கிய முதல் நாள் என்பதால் துறையூரில் அரசு பொதுத் தேர்வு மையத்தைக் கூட அமைச்சர் பார்வையிடாமல் சென்று விட்டார் என்றபடி பொது மக்கள் பேசிக் கொண்டனர். துறை சார்ந்த கேள்விகளை அதிகாரிகளிடத்தில் அமைச்சர் கேட்டதற்கு குறைகள் இருக்கும் போதே , எந்தக் குறையும் இல்லை என அதிகாரிகள் சமாளித்து அனுப்பியது பலருக்கும் வேடிக்கையாக இருந்தது. அமைச்சரின் திடீர் விசிட்டின் போது , துறையூர் எம் எல் ஏ ஸ்டாலின் குமார் , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

-ஜோஸ்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.