கொலையில் முடிந்த உல்லாச டார்ச்சர் – பெண் பகீர் வாக்குமூலம் !

0

சென்னை பெரியமேடு லாட்ஜில் தனியார் கம்பெனி ஊழியரை கொலை செய்தது தொடர்பாக, அவரது காதலி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் மீண்டும், மீண்டும் உல்லாசத்துக்கு டார்ச்சர் கொடுத்ததால் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி தெருவைச்சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 41). தனியார் நிறுவனம் ஒன்றில் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணம் ஆகாதவர். தனது அண்ணன் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார். இவருக்கும், சென்னை கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவைச்சேர்ந்த பிரியா (41) என்ற பெண்ணுக்கும் காதல் தொடர்பு இருந்தது. பிரியா கணவரை பிரிந்தவர். 2 குழந்தைகளுக்கு தாய். பிரகாசும், பிரியாவும் மாதத்தில் இரண்டு, மூன்று முறை தனியாக லாட்ஜில் அறை எடுத்து தங்கி உல்லாசம் அனுபவிப்பார்கள்.

அதுபோல கடந்த 8-ந்தேதி அன்று இருவரும் சென்னை பெரியமேடு ஆர்.எம்.சாலையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கினார்கள். உல்லாசம் அனுபவித்தார்கள். திடீரென்று பிரகாஷ் மயங்கி விழுந்து விட்டார் என்று லாட்ஜ் மேலாளருக்கு பிரியா தகவல் கொடுத்தார். லாட்ஜ் மேலாளர் போய் பார்த்தபோது, பிரகாஷ் இறந்து கிடந்தார். இது குறித்து பெரியமேடு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இது பற்றி தகவல் கிடைத்தவுடன் கீழ்ப்பாக்கம் போலீஸ் துணை கமிஷனர் கோபி, வேப்பேரி உதவி கமிஷனர் அரிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது, பிரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

- Advertisement -

தானும், பிரகாசும் கள்ளக்காதலில் ஈடுபடுவது வெளியில் தெரிந்து விட்டதால், லாட்ஜில் அறை எடுத்து தங்கி, உல்லாசம் அனுபவித்து விட்டு, பின்னர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்ததாகவும், அதன்படி உல்லாசம் அனுபவித்து விட்டு, லாட்ஜ் அறை மின்விசிறியில் தனது சேலையால் இருவரும் தூக்கு போட்டதாகவும், பிரகாஷ் கழுத்து இறுகி இறந்து விட்டதாகவும், தான் தூக்கில் தொங்க முடியவில்லை, என்றும் பிரியா கதறி அழுதபடி கூறினார்.

பிரியா தப்பி ஓடாமல், முறையாக லாட்ஜ் மேலாளர் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்ததால், போலீசாரும் முதலில் அவர் கூறியது உண்மையாக இருக்கலாம், என்று நம்பினார்கள். ஆனால் தடயஅறிவியல் அதிகாரிகள் வந்து சம்பவ இடத்தை பார்த்து ஆய்வு செய்தனர்.

அப்போது தூக்குப்போட்ட மின்விசிறிக்கும், படுக்கைக்கும் உள்ள இடைவெளி தூரம் தூக்குப்போடும் அளவுக்கு இல்லை என்றும், எனவே தூக்குப்போட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தனர். இதனால் போலீசார் பிரியா மீது சந்தேகம் கொண்டனர். இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவரை பெண் போலீஸ் காவலில் வைத்தனர்.

பிரகாசின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரகாசின் பின்பக்க தலையில் பலத்த அடிபட்டு உள்காயம் ஏற்பட்டு அதன்மூலம், அவர் இறந்துள்ளார், என்று தெரிவித்தனர். அவர் தூக்குப்போட்டு சாகவில்லை என்றும், கொலை செய்யப்பட்டதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் டாக்டர்கள் கூறிவிட்டனர்.

4 bismi svs

உடனே போலீசார் பிரியாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அதில் அவர், பிரகாசை கீழே தள்ளி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலை எப்படி நடந்தது? என்பது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

பிரியா - பிரகாஷ்
பிரியா – பிரகாஷ்

நான் எனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தேன். ஆண் துணைக்கு ஏங்கினேன். அயனாவரத்தில் உள்ள அப்பள கம்பெனியில் வேலைபார்த்தேன். அப்போது பிரகாசை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இருவரும் ஒருவரை, ஒருவர் விரும்பினோம். கணவன்-மனைவி போல வாழ ஆரம்பித்தோம். மாதம் இரண்டு அல்லது மூன்று முறை ஏதாவது ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருப்போம். நாங்கள் இருவரும் மது அருந்துவோம். பகலில் மட்டும் அறையில் தங்கி உல்லாசம் அனுபவிப்போம்.

தற்போது அதுபோல் பகல் 11 மணிக்கு அறை எடுத்து தங்கி, மாலை வரை 2 முறை சந்தோஷமாக இருந்தோம். 4 குவார்ட்டர் பாட்டில் மது அருந்தினோம். நன்றாக பிரியாணி வாங்கி சாப்பிட்டோம். இரவு 8 மணி அளவில் அறையை காலி செய்து விட்டு போகலாம் என்று சொன்னேன்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக பிரகாஷ் 3-வது முறையாக உல்லாசத்துக்கு கூப்பிட்டார். ஆனால் எனக்கு விருப்பம் இல்லை. முடியாது என்று மறுத்தேன். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவர் என் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து நொறுக்கினார்.

அடி தாங்காமல் அவரை பலம் கொண்டு், பிடித்து கீழே தள்ளினேன். அவர் மல்லாக்க கீழே விழுந்து விட்டார். உடனே மூச்சு, பேச்சு இல்லாமல் அப்படியே கிடந்தார். அவர் இறந்து போய் இருப்பார், என்று நினைக்கவில்லை. உடனே ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக லாட்ஜ் மேலாளரை கூப்பிட்டேன். நான் அவரை கொலை செய்ய நினைத்து கீழே தள்ளவில்லை. போலீசார் வந்து பார்த்த பிறகு தான் பிரகாஷ் இறந்து போனது உறுதியானது. 3 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தோம்.

ஒரு நாள் கூட பிரகாஷ் இதுபோல 3-வது முறை உல்லாசத்துக்கு ஆசைபட்டதில்லை. மேலும் என்னை இதுபோல அடித்து துன்புறுத்தியதும் இல்லை. விதி விளையாடி விட்டது. தற்கொலை நாடகம் நடத்தி கொலை பழியில் இருந்து தப்ப நினைத்தேன். அதுவும் நடக்கவில்லை.  என்று போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

பிரியா மீது கொலைக்கு இணையான இ.பி.கோ.304-ஏ- (1) என்ற சட்டப்பிரிவின் கீழ், சாவுக்கு காரணமாக இருந்ததாக பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் திவ்யகுமார் வழக்குப்பதிவு செய்தார். பிரியா கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.