திருமாவுக்காக எடப்பாடி நடத்தும் அரசியல் ஆட்டம் !

0

ஈரோடு இடைத்தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட மார்ச்சு 2ஆம் தேதியிலிருந்து, பாஜக – அதிமுக (எடப்பாடி) இடையே வார்த்தைப் போர் உச்சத்தைத் தொட்டு உள்ளது. பாஜகவின் வானதி சீனிவாசன், பொன்.இராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்கள், அதிமுக – பாஜக இடையே தற்போது மோதல் இருந்தாலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடரும் என்றார்கள்.

அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முனுசாமி போன்றவர்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடரும் என்று வெள்ளைக்கொடி வீசியுள்ளனர். என்றாலும் அதிமுக – பாஜக உறவு நீருபூத்த நெருப்பாகவே உள்ளது என்பதே உண்மை. எப்போது வேண்டுமானலும் இரு பக்கத்திலும் உறவு அறிவிப்பு வெளியாகும். பாஜக உறவை அதிமுக முறித்துக்கொள்கிறோம் என்று அறிவிப்பை வெளியிட்டால் அதற்குப் பின்னணியில் விசிக தலைவர் தொல்.திருமா இருப்பார் என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

2 dhanalakshmi joseph
எடப்பாடி - திருமா
எடப்பாடி – திருமா

எடப்பாடிக்குத் திருமாவின் வாழ்த்து

- Advertisement -

- Advertisement -

ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப் பதிவுக்கு சிலநாள்களுக்கு முன்புதான் உச்சநீதி மன்றம் ‘ஜூலை 11 அதிமுக கூட்டிய பொதுக்குழு செல்லும்” என்று எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியது. அப்போது திமுக கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சிகளும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், திருமா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதிமன்றங்களில் ஏறி இறங்கி, தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பைப் பெற்றுள்ளார்.

இது எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை வெளிப்படுத்துகின்றது. வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரைத் திருமா திகைப்பில் ஆழ்த்தினார்.

அண்ணன் திருமா கூட்டணியில் இருப்பார் – அதிமுக

அதிமுகவின் சார்பில் ஊடகங்களில் பேசும் ஜெயக்குமார், பொங்கலூர் மணிகண்டன், சேலம் மணிகண்டன், சுரேஷ் கண்ணன் போன்றவர் விவாதங்களில் பேசும்போது,“2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ‘மெகா’ கூட்டணி அமைக்கும். அப்போது எங்கள் கூட்டணியில் ‘அண்ணன்’ திருமா நிச்சயமாக, உறுதியாக இருப்பார். இப்போது நாங்கள் சொல்வதை நீங்கள் ஏற்கமாட்டீர்கள். 2024 மார்ச்சு மாதத்தில் தேர்தலில் அறிவிப்பு வெளியானவுடன் நாங்கள் இப்போது சொல்வது அப்போது உண்மையாக இருக்கும் என்பது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்” என்று ஒரே குரலில் சத்தியம் செய்யாத குறையாக பேசி வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் - திருமா - வைகோ
மு.க.ஸ்டாலின் – திருமா – வைகோ

திமுக கூட்டணியிலிருந்து விலகுவோம் – திருமா

விசிக தலைவர் தொல்.திருமா மிக அண்மையில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உணர்ச்சி மேலிட்டு பேசும்போது,“ விடுதலை சிறுத்தைகள் சிந்தாந்த ரீதியில் இயங்கிவரும் ஒரு அரசியல் கட்சி. நாங்கள் வெற்றி, தோல்விகளைப் பற்றி கவலைப்படாதவர்கள். இரண்டு ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது, சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தூக்கி எறிந்தேன். வரும் தேர்தல்களில் சாதியவாத பாமக, மதவாத பாஜக இல்லாத கூட்டணியில்தான் இருப்போம். திமுக கூட்டணியில் இந்த இருகட்சிகள் இடம்பெற்றால் கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வெளியேறும் என்பதை அறுதியிட்டு உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கொந்தளிப்புடன் பேசினார்.

4 bismi svs

இவரைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுர் ஷாநவாஸ், பாலாஜி போன்றவர்களும் திருமாவின் கருத்தை ஆதரித்தே கருத்து தெரிவித்தனர்.

துரைமுருகன் - ஸ்டாலின் - ராமதாஸ்
துரைமுருகன் – ஸ்டாலின் – ராமதாஸ்

திமுக கூட்டணியில் பாமக – துரை முருகன் எடுக்கும் முயற்சி

விசிக தலைவர் திருமாவின் கோபத்திற்கும் கொந்தளிப்புக்கும் அடிப்படை காரணம், வரும் 2004 நாடாளுமன்ற தேர்தலில் பாமகவைத் திமுக கூட்டணியில் இணைக்க, திமுகவின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரை முருகன் எல்லாவித முயற்சிகளையும் எடுத்துவருகிறார். கூட்டணியிலிருந்து விசிக விலகும் என்பதை அறிந்தே துரை முருகன் முயற்சிகளை மேற்கொள்வதுதான் திருமாவைக் கோபம் கொள்ள வைத்துள்ளது என்பதை திமுக தரப்பும் விசிக தரப்பும் உறுதி செய்கின்றனர். பாமகவின் தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் பேசும்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கருத்தொருமித்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்தே போட்டியிடும்” என்று கூறியுள்ளார்.

அன்புமணியின் பேச்சும் துரை முருகன் முயற்சியும் ஒரே நேர்கோட்டில் இருப்பதை உணரலாம். மேலும் அமைச்சர் துரை முருகன் தன் சாதி காட்சி நாடாளுமன்ற மக்களவையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவதான் இதற்குக் காரணம்.

மோடி - எடப்பாடி பழனிசாமி
மோடி – எடப்பாடி பழனிசாமி

பாஜகவைத் தூக்கி சுமக்கவேண்டாம் – திருமா

தற்போது பாஜக – அதிமுக இடையே வார்த்தைப்போர் நடந்துக்கொண்டிருந்த சமயத்தில் மீண்டும் விசிக தலைவர் திருமா, “அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மதவாத பாஜகவை விரும்பவில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி உணர்ந்து பாஜகவைத் தூக்கிச் சுமந்து சிறுபான்மையினர் வாக்குகளை ஏன் இழந்து தோல்வியை ஏன் சந்திக்கவேண்டும். பாஜகவைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றி மதசார்பின்மைக்கு எடப்பாடி ஆதரவு தரவேண்டும்” என்று வேண்டுகோள் வைத்துள்ளார். இது திருமா அதிமுக கூட்டணிக்காகக் காட்டிய பச்சைக்கொடியாகவே எண்ணிட வேண்டியுள்ளது. அதிமுக தரப்பில், திருமாக அதிமுகக் கூட்டணியில் இணைந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் 4 தனித்தொகுதியும் 2 பொதுதொகுதியும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் உள்ளன. மேலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருமா சிதம்பரம் தொகுதியை விட்டுவிட்டு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமா - பேட்டி
திருமா – பேட்டி

2024 தேர்தல் களம் திருமாவைச் சுற்றியே…….

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாமக திமுக கூட்டணியில் இணைந்தால், அதிமுக கூட்டணியிலிருந்து பாஜகவை வெளியேற்றி விடுதலை சிறுத்தைகளை இணைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடம் இருக்காது. திமுக கூட்டணியிலிருக்கும் மதசார்பற்ற ஜனநாயக முன்னணி ஆட்சி அமைக்க வாய்ப்பிருந்தால் விடுதலை சிறுத்தைகள் ஆதரிக்கும்; அதிமுகவையும் ஆதரிக்க வைக்கும் என்ற கூடுதல் செய்தியும் விடுதலை சிறுத்தைகள் தரப்பில் சொல்லப்படுகின்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் திருமா எடுக்கும் முடிவையொட்டியே இருக்கும் என்பதே தற்போதைய நிலவரம் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் களத்திற்குக் காத்திருப்போம்.

-ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.