உதயநிதி ஸ்டாலின் தஞ்சை வருகை: விதிமீறல்களைக் கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

உதயநிதி ஸ்டாலினின் வருகையையொட்டி தஞ்சை மாநகரில் உரிய அனுமதியின்றி, விதிமுறைகளை மீறி திமுக சார்பில் ஆங்காங்கே கொடிக் கம்பங்கள் மற்றும் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அமைச்சரவையில் உள்ள 34 அமைச்சர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலினுக்கு ஏதோ துணை முதல்வருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பிற்கு இணையாக தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

Sri Kumaran Mini HAll Trichy


திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக தஞ்சை மாவட்டத்திற்கு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று வருகிறார்.

இதையடுத்து, தஞ்சை மாநகர திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாக உரிய அனுமதியின்றி;, விதிமுறைகளை மீறி நெடுஞ்சாலை மற்றும் தஞ்சை மாநகர் முழுவதும் பத்தடி உயரத்திற்கு திமுக கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. மேலும் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

உயர்நீதிமன்ற உத்தரவுக்கிணங்க தஞ்சை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு விளம்பர பலகையோ, கொடிக் கம்பமோ நடக்கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தஞ்சையில் பொறுப்பேற்ற பின் விடுத்த பத்திரிகை செய்தியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Flats in Trichy for Sale

கட்சி சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, சம்பந்தப்பட்ட ஊராட்சியிடம் உரிய முன் அனுமதி பெற்று 10 மீட்டர் இடைவெளி விட்டு பிளாஸ்டிக் பைப் மூலம் கொடிக் கம்பம் வைக்கலாம். உரிய அனுமதியின்றி கொடிக்கம்பம் அல்லது ஃபிளக்ஸ் பேனர் வைத்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஆஷிஷ் ராவத் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தற்போது உரிய அனுமதியின்றி கொடிக் கம்பங்கள், ஃபிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ள திமுக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேட்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதற்கிடையே, சென்னை பத்திரிiயாளர் சங்கம் சார்பில் தஞ்சை ஆத்துப்பாலம் அருகேயுள்ள சரோஜ் நினைவு அரங்கில் சங்க உறுப்பினர்கள் அறிமுக் கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 15-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அச்சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சிக்கு வருகைதரும் சங்க மாநில நிர்வாகிகளை வரவேற்கும் விதமாக ஃபிளக்ஸ் பேனர் வைக்க முடிவு செய்து இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட துறையினரிடம் 15 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும் எனக்கூறி அனுமதி தர மறுத்துவிட்டார் மாநகராட்சி ஆணையர்.

ஆனால் திமுக சார்பில் தஞ்சை மாநகர் முழுவதும் தற்போது முன்அனுமதியின்றி விதிமுறைகளை மீறி திமுக கொடிக் கம்பங்கள் நடப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறார் மாநகர ஆணையர். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் ஆகாதா? தஞ்சை மாநகர ஆணையரின் நேர்மை இவ்வளவுதானா? எளியோரிடம்தான் அவர் தனது அதிகாரம் மற்றும் வீரத்தைக் காட்டுவாரா? என்கின்றனர் சென்னை பத்திரிகையாளர் சங்க தஞ்சை மாவட்ட நிர்வாகிகள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.