சாத்தூரில் முதியவர் உட்பட 3 கைக்குழந்தைகளுடன் பெண்கள் பள்ளத்தில் விழுந்த காணொளி வெளியாகி பரபரப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சாத்தூரில் நெடுஞ்சாலை துறையினரின் அலட்சியத்தால் முதியவர் உட்பட 3 கைக்குழந்தைகளுடன் பெண்கள் பள்ளத்தில் விழுந்த காணொளி வெளியாகி பரபரப்பு – 

வீடியோ லிங்

Sri Kumaran Mini HAll Trichy

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலை துறையினரால், வாறுகால் அமைத்தல், சாலை அகலப்படுத்துதல், பேவர் பிளாக் பதித்தல், போன்ற பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் அங்குசம் நாளிதழில் நெடுஞ்சாலைத் துறையினரின் பணிகள் தரமற்ற முறையிலும் வெளிப்படை தன்மை இன்றி பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

பாதுகாப்பற்ற முறையில் தரம் இல்லாமல் நடைபெற்ற பணிகள்
பாதுகாப்பற்ற முறையில் தரம் இல்லாமல் நடைபெற்ற பணிகள்

அந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், இன்று ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சாத்தூர் மதுரை செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே நகராட்சி நிர்வாக வளாகம் அருகே
3 பெண்கள் கைக்குழந்தையுடன் சாலையை கடந்து வருகின்றனர்.

Flats in Trichy for Sale

அங்கு சாலையை அகலப்படுத்தும் பணிகளுக்காக தோண்டி வைக்கப்பட்ட பள்ளத்தில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் தவறி விழ அவரை தூக்கி விட உடன் வந்த மற்ற இரு பெண்களும் அவர்கள் கையில் வைத்திருந்த குழந்தைகளுடன் தவறி அதே பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கி அடிபட்டு கீழே விழுந்த அவர்களை போக்குவரத்து காவலர் பகத்சிங் மற்றும் செல்போன் கடை ஊழியர்களின் உதவியுடன் அவர்களை வெளியே மீட்ட பின்பு முதியவர் ஒருவர் மீண்டும் அதே பள்ளத்தில் மீண்டும் விழும் காணொளி காட்சி காண்போரை அதிர்ச்சி அடைய செய்கிறது.

நான்கு வழிச்சாலையில் நெடுஞ்சாலைத்துறையினரால் மூடப்படாமல் இருக்கும் குழிகள்
நான்கு வழிச்சாலையில் நெடுஞ்சாலைத்துறையினரால் மூடப்படாமல் இருக்கும் குழிகள்

அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணிகளும் பொதுமக்களுக்கானது, ஆனால் சாத்தூர் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ளும் பணிகளை பார்க்கும் பொழுது அவ்வாறு தெரியவில்லை
புதிதாக பணிகள் தொடங்கும் பொழுது பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின்னரே பணிகள் தொடங்க வேண்டும் அது மழைக்காலமோ அல்லது வெயில் காலமோ பாதுகாப்பு என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

மேலும் இதுபோல் விபத்துக்கள் ஏற்படாதவாறு யார் தவறுசெய்திருந்தாலும், அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

– மாரீஸ்வரன் 

வீடியோ லிங்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.