” ஏழை “நகராட்சியா..? நகர்மன்ற கூட்டத்தில் ஆணையரின் பதிலால் அதிர்ச்சி…! நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாவட்டத்திற்கே இந்த நிலைமையா..?

0

” ஏழை “நகராட்சியா..? நகர்மன்ற கூட்டத்தில் ஆணையரின் பதிலால் அதிர்ச்சி…! நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாவட்டத்திற்கே இந்த நிலைமையா..?

 

நகராட்சி சாதாரணக் கூட்டம்
நகராட்சி சாதாரணக் கூட்டம்

 

4 bismi svs

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சியில் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் செல்வராணி தலைமை வகித்தார்,துணைத் தலைவர் முரளி முன்னிலை வகித்தார். ஆணையர் சுரேஷ்குமார் வரவேற்றார்.இக்கூட்டத்தில் மன்றப் பொருள்களின் மீது விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பேசிய1-வது வார்டு உறுப்பினர் லலிதா , தனது வார்டில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படவில்லை எனவும் , இதனால் அதிருப்தியில் பொதுமக்கள் தனது வீட்டிற்கு வந்து முறையிடுவதாகவும் , தெருவிளக்கு, குடிநீர் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.16-வது நகர்மன்ற அதிமுக உறுப்பினரான சந்திராவும் தண்ணீர் டேங்க் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவை என கோரிக்கை விடுத்தார்.அதற்கு பதிலளித்த ஆணையர் சுரேஷ்குமார், ” துறையூர் நகராட்சி ஏழை நகராட்சியாக உள்ளது.

ஆணையர் சுரேஷ்குமார்
ஆணையர் சுரேஷ்குமார்

 

- Advertisement -

- Advertisement -

தற்போதைக்கு எவ்வித பணியும் செய்ய முடியாத நிலையில் உள்ளதால் நிதிநிலை மேம்பட்டவுடன் உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பதில் கூறினார். ஆணையரின் இந்த பதிலால் ஆளும் கட்சியைச் சேர்ந்த நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர் , திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்து , எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக துணைத் தலைவர் முரளி ஆணையரிடம் , “ஏழை நகராட்சி என எப்படி சொல்லலாம். ஏழை நகராட்சியை பணக்கார நகராட்சியாக மாற்றுவது தான் அதிகாரியின் வேலை எனவும், வரியை நிலுவையில்லாமல் வசூலிக்க வேண்டும் , வருமானத்தைப் பெருக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அதற்குண்டான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், மீண்டும் ஒருமுறை இப்படி பதில் கூறக் கூடாது என ஆணையருக்கு அறிவுறுத்தினார். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திருச்சி மாவட்டத்தில் இருப்பதாலும், அவரது மாவட்டத்தில் உள்ள நகராட்சியை , “ஏழை “நகராட்சி , “பணமில்லாத “நகராட்சி என நகர்மன்றக் கூட்டத்திலேயே துணிவாக பதிலளித்த துறையூர் நகராட்சி ஆணையரான சுரேஷ்குமாரை அதிமுக நகரச் செயலாளரும் , 20வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான அமைதி பாலு உள்ளிட்ட அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சி கலந்த வியப்புடன் பார்த்தனர். ஆணையரின் பதில் துறையூர் நகராட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.