முன்னாள் அதிமுக அமைச்சருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்….
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்….
அகில இந்திய வல்லரசு பார்வர்ட் பிளாக் சார்பில் மதுரையின் முக்கிய நகர் பகுதிகளில் கண்டன போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

அதில் தேவர் இனத்தை இழிவு படுத்தி பேசி பொது மேடையில் தாக்கிய அதிமுகவை சேர்ந்த கேடி ராஜேந்திர பாலாஜி மீது காவல்துறையே நடவடிக்கை எடு என்கின்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டு .பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மூக்கையா தேவர் உள்ளிட்டோர்களின்புகைப்படங்களை இணைத்து இந்த கண்டன போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையிலே சால்வை அணிவித்தவர் தாக்கியதாகவும் மேலும் அவதூறாக பேசியதாக தொலைக்காட்சி உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் வந்ததை தொடர்ந்து இந்த கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளதாக தகவல்.
மதுரையில் முன்னாள் அமைச்சர் கே டி ஆர் க்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டா் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.