25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா-’வைகைப்புயல்’ கூட்டணி!
கே.ஆர்.ஜி.கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் நான்காவது படத்தின் பூஜை துபாயில் ஆகஸ்ட்.25-ஆம் தேதி கோலாகலமாக நடந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும் வைகைப்புயல் வடிவேலுவும் இணையும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜவும் கைகோர்த்துள்ளார். படத்தை சாம் ரோட்ரிக்ஸ் டைரக்ட் பண்ணுகிறார்.
பட பூஜையில் தயாரிப்பாளர்கள் லைக்கா சுபாஸ்கரன், ஞானவேல் ராஜா, நடிகர் ஜீவா, டைரக்டர் நிதிஷ் சகாதேவ் உட்பட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஆக்ஷன் அட்வென்ச்சர் & கலக்கல் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தில் பப்லு பிரித்விராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும். படத்தின் ஒளிப்பதிவு : விக்னேஷ் வாசு, எடிட்டிங் : ஆண்டனி, ஸ்டண்ட் : பீட்டர் ஹெய்ன், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
— மதுரை மாறன்