அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பிரணவ் ஜூவல்லரி மோசடி : 1.6 கோடி மதிப்புள்ள நகைகள் ஏலம் ! முழு விபரம் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு, குறுகிய காலத்தில் சென்னை, மதுரை, கும்பகோணம், நாகர்கோயில், ஈரோடு மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி வரையில் அடுத்தடுத்து பல்வேறு கிளைகளை தொடங்கிய பிரணவ் ஜூவல்லரி, பல்வேறு கவர்ச்சிகரமான தங்கநகை சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, கொடுத்த வாக்குறுதியின்படி நகையை திருப்பிக் கொடுக்க முடியாமல் வழக்கில் சிக்கியது.

அதிகவட்டிக்கு ஆசைப்பட்டு மோசடிக்கும்பலிடம் சிக்கித்தவிக்கும் கதைகள் தமிழகத்தில் ஏராளம் உண்டு. ஆனால், தங்கநகை சேமிப்பு என்பது ஏழை பணக்காரன் வேறுபாடு இன்றி எல்லோரும் நம்பிக்கையாக சேமிக்கும் ஒரு வழிமுறையாகவே இருந்து வருகிறது. இந்த நம்பிக்கையை தகர்க்கும் வகையில் அமைந்ததுதான் பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கு.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பிரணவ் ஜூவல்லரிகுறுகிய காலத்தில் அடுத்தடுத்து பல்வேறு கிளைகளை திறந்தது மட்டுமின்றி, விளம்பரங்களை பிரம்மாண்டமாக செய்தது பிரணவ் ஜூவல்லரி. ரயில் பெட்டிகளில்கூட, அதன் விளம்பரங்களை காண முடிந்தது. பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் தோன்றிய விளம்பரங்களையும் வெளியிட்டது. 0% செய்கூலி என்பது போன்ற கவர்ச்சிகர திட்டங்களுக்கும் பஞ்சமில்லை. இவ்வாறு, விளம்பரப்படுத்தி வளைத்து வளைத்து பணத்தை மட்டும் வசூலித்துவிட்டு, வாக்குறுதி கொடுத்தபடி ஓராண்டு காலத்தில் தங்க நகைகளை திருப்பிக் கொடுக்க முடியாமல், வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல், அடுத்தடுத்து கிளைகளை மூடியது. மக்கள் தெருவில் இறங்கி போராடத் தொடங்கினார்கள். திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிய நிறுவனம் என்பதால், கடந்த 2023 ஆம் வருடம் அக்-16 இல் திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் (8/2023) வழக்கு பதிவு செய்து உரிமையாளர் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா, மற்றும் மேனேஜேர் நாராயணனை அடுத்தடுத்து கைது செய்த நிலையில்,  விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

பிரணவ் ஜூவல்லரிஇதுவரை 2200க்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மோசடியின் அளவு 24 கோடிக்கும் மேல் என்கிறார்கள் போலீசார் தரப்பில். இந்நிலையில், பிரணவ் ஜூவல்லரி நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை பொது ஏலத்தில் விடுவதற்கான அறிவிப்பை திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டிருக்கிறார்கள்.

நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில் ஏலத்தை நடத்தும் அதே எம்.எஸ்.டி.சி. (https://www.mstcecommerce.com/) நிறுவனம்தான் இந்த ஏலத்தையும் நடத்துகிறது. ஏலம் 06.08.2026 அன்று நடைபெறும். 1558.270 கிராம் தங்க நகைகளின் குறைந்தபட்ச ஏல மதிப்பாக, ரூ.1,63,46,930/- என்பதாக தீர்மானித்திருக்கிறார்கள். 15,000.332 கிராம் வெள்ளி பொருட்களின் குறைந்தபட்ச விலையாக ரூ 19,86,658/- என்பதாக தீர்மானித்திருக்கிறார்கள். ரூ.5000/- மடங்கில் ஏலத்தை உயர்த்திக் கேட்கலாம்.

ஏலம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரை 9585829297 என்ற எண்ணிலும்; ஏலத்தை நடத்தும் எம்.எஸ்.டி.சி. அலுவலர்களை 9499054101, 9499054102, 9499054103, 9499054104, ஆகிய எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.