LABA Group of Business நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவரா? திருச்சி EOW முக்கிய அறிவிப்பு!
முதலீடு செய்து ஏமாந்தீர்களா? | LABA Group of Business மோசடி குறித்து திருச்சி EOW முக்கிய அறிவிப்பு!
”லாபா குரூப் ஆஃப் பிசினஸ்” என்ற நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் யாரேனும் இருந்தால் புகார் அளிக்க முன்வருமாறு திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
கோவையைச் சேர்ந்த ஜெகதீஷ் அவரது மனைவி மஞ்சு, திருச்சியைச் சேர்ந்த வி.வி.ராமதாஸ் ஆகியோர் கூட்டாக இணைந்து தொடங்கிய நிறுவனம்தான், LABA Group of Business. இதனை சொசைட்டி என்பதாகவும் அறிவித்துக் கொண்டவர்கள், தங்களிடம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 30% வட்டி தருவதாக ஆசை காட்டியிருக்கிறார்கள். வட்டி வேண்டாம் எனில், அதற்குப்பதிலாக வீட்டு மனையாக தருவதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.
இதனை நம்பி 28 இலட்சத்தை முதலீடு செய்த தஞ்சை கும்பகோணத்தைச் சேர்ந்த ஜெனார்த்தனம் என்பவர், இவர்கள் சொன்னதுபடி வட்டியும் தரவில்லை; போட்ட பணத்தையும் திருப்பித்தரவில்லை என்பதாக கடந்த 2024 ஆம் ஆண்டில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இதே விவகாரத்தில் இந்த வழக்கை பொருளாதாரக்குற்றப்பிரிவுக்கு மாற்றி விசாரிக்குமாறு மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்ட நிலையில், தற்போது திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் 5/2026 வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில்தான், இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் யாரேனும் இருந்தால் புகார் அளிக்க முன்வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
புகாருக்கு அணுக வேண்டிய முகவரி :
திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகம்,
எண்: 10, அப்துல்சலாம் தெரு, மன்னார்புரம், திருச்சி – 620020.
அலுவலக வேலை நாட்களில் நேரில் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி புகார் தெரிவிக்கலாம்.
— அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.