கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்கள் – கள்ளச்சாராயக்காரர் தடுப்பு – சட்டத்தில் கைது !
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் சின்னத்தாராபுரம் காவல் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சியதாக (1) கதிரேசன் 32/2025, த/பெ.செல்வராஜ். 1/67 மூலப்பட்டி காலணி, நாகம்பள்ளி கிராமம், அரவக்குறிச்சி தாலுகா, கரூர் மாவட்டம். (2) வேலுச்சாமி 67/2025, த/பெ.ஆறுமுகம், 1/190 அம்மன் நகர், பி.அணைப்பாளையம், முடிக்கணம் அஞ்சல், சின்னதாராபுரம், கரூர் மாவட்டம் ஆகியோர்கள் மீது கடந்த 24.09.2025ம் தேதியன்று கரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி எதிரிகளை 24.09.2025-ம் தேதி கைது செய்யப்பட்டு அன்றைய தினமே நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.

மேற்படி எதிரிகள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.ஜோஷ் தங்கையா பரிந்துரையின் பேரில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல், இ.ஆ.ப., உத்தரவின் படி 13.10.2025 ஆம் தேதி கள்ளச்சாராயக்காரர் (Bootleggers) தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.