அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வீரபாண்டி கோவிலில் சாதிபாகுபாடு ! இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது பாய்ந்த வன்கொடுமை வழக்கு !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வீரபாண்டி கோவிலில் திமுக சேர்மனுக்கு பரிவட்டம் கட்டுவதில் சாதிய பாகுபாடு. இந்து அறநிலைத்துறை அலுவலர்கள் உதவி ஆணையர், செயல் அலுவலர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு.

தேனி மாவட்டம், வீர பாண்டி கவுமாரியம்மன் கோயில் சி்த்திரைத் திருவிழாவில் திமுக பேரூராட்சி தலைவருக்கான முதல் மரியாதையை வழங்குவதில் வழக்கத்திற்கு மாறாக செய்து ஜாதிய பாகுபாட்டுடன் பேசியதாக அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெய தேவி, செயல் அலுவலர் நாராயணி உட்பட ஐந்து ‘பேர் மீது எஸ்.சி.எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

விசாரிக்கின்றனர்.

பேரூராட்சித் தலைவர் கீதா
பேரூராட்சித் தலைவர் கீதா

யாவரும் கேளீர்

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இக்கோயில் சித்திரைத் திருவிழாவில் தேரோட் டம் கடந்த மே 9 நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெய தேவி, கோயில் செயல் அலுவலர் நாராயணி, கணக்கர்கள் பாலசுப்பிர மணி, பழனியப்பன், மேல காரர் வீரமணி ஆகியோர் வீரபாண்டி தி.மு.க., பேரூராட்சித் தலைவர் கீதாவுக்கு வழங்க வேண்டிய முதல் மரியாதையை கொடுக்காமல், வழக்கத்திற்கு மாறாக மரியாதை செய்ததாகவும், தட்டிக்கேட்ட பேரூராட் சித்தலைவர் கீதாவை ஜாதிய பாகுபாட்டுடன் பேசி இழிவுப்படுத்தியதாகவும்புகார் தெரிவிக்கப்பட்டது.

ஜெயதேவி, நராயணி, பாலசுப்பிரமணி, பழனியப்பன், வீரமணி
ஜெயதேவி, நராயணி, பாலசுப்பிரமணி, பழனியப்பன், வீரமணி

இது குறித்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் திடம் பேரூராட்சி தலைவர் கீதா புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து வீரபாண்டி போலீசார் உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் நராயணி, கணக்கர்கள் பாலசுப்பிரமணி, பழனியப்பன், மேலகாரர் வீரமணி உள்ளிட்ட 5 பேர் மீது கூடுதல் எஸ்.பி., கேல்க்கர் சுப்ரமணிய பால்சந்ரா, எஸ்.ஐ.-ராஜசேகர் ஆகியோர் எஸ். சி.எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.