ஆன்லைன் வழியே பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையில் அதிரடி மாற்றம் ! முழுமையான தகவல் !
ஸ்டார் திட்டம் ஆன்லைன் வழி ஆவணப்பதிவு மேற்கொள்வது தொடர்பாக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது, பதிவுத்துறை.
இந்த விவகாரம் தொடர்பாக, அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள், அனைத்து மாவட்டப் பதிவாளர்கள், (நிர்வாகம் மற்றும் தணிக்கை), அனைத்து பதிவு அலுவலர்கள் ஆகியோருக்கு பதிவுத்துறை தலைவர் பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் வழங்கி விரிவான சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்.
அந்த சுற்றறிக்கையில்,
“இணையவழி ஆவணப்பதிவு மேற்கொள்ள ஏதுவாக மேற்கொள்ளப்பட்ட சட்ட/விதி திருத்தங்கள் குறித்த அரசிதழ்/அரசாணை பார்வை 1-ல் காணும் கடிதம் வழி அனைத்து கள அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக.
1) பார்வை 2 மற்றும் 3-ல் காணும் கடிதங்கள் காணும் கடிதங்கள் வழியாக ஆன்லைன் வழி சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய சீரான நடைமுறைகள் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் தேவையற்ற காரணங்களைத் தெரிவித்து ஆன்லைன்வழி பெறப்படும் ஆவணங்களை திருப்பி அனுப்பும் போக்கு நிலவுவது கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது. இந்நிலை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இது தொடர்பாக பின்வரும் தெளிவுரைகள் வழங்கப்படுகின்றன. பார்வை 1-ல் கண்ட விதியில் விதி எண் 4-ல் கீழ்க்கண்டவாறு தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது:
“(4) Online Execution of documents :- For the purpose of online execution and registration of documents, appending of biometric and thumb, capturing of finger print, capturing of digital photo through the software module, and Aadhaar number of the executants and the attesting witnesses are mandatory. The captured finger print shall be compared with Aadhaar database for providing the identity of the executants and witnesses.”
மேற்கண்ட விதியின்படி, ஆதார்வழி ஆவணதாரர் அடையாளம் காணப்படும் நிலையிலேயே ஆவணம் எழுதிக் கொடுத்ததாக ஒப்புக்கொண்டதாக கருதப்பட வேண்டும். ஆதார்வழி சாட்சிகள் அடையாளம் காணப்படும் நிலையிலேயே “இன்னாரென்று நிரூபித்தவர்கள்/கையொப்பம் செய்ததாக” கருதப்பட வேண்டும்.
“(5) Procedure for presentation of documents for registration:- A duly executed document shall be verified through Aadhaar database and shall be presented for registration through online along with the fee for registration.”
மேற்கண்ட விதியின்படி ஆதார்வழி ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகள் அடையாளம் காணப்படும் நிலையிலும் உரியதொகை செலுத்தப்பட்ட பின் ஆன்லைன் வழி சமர்ப்பிக்கப்படுவதை “பதிவிற்கு ஆவணம் தாக்கல்” செய்யப்படுவதாக கருதப்பட வேண்டும்.
“(6)(4) For the purpose of these Rules, it shall always be construed that appending signature to the document shall mean executing, accepting and admitting the document”
மேற்கண்ட விதியின்படி, பதிவு விதிகளில் சொல்லப்பட்டிருக்கும் “appending signature to the document” என்பது ஆவணம் எழுதிக் கொடுப்பதை உள்ளடக்கியது ஆகும். ஆன்லைன் ஆவணத்தைப் பொறுத்து ஆவணம் எழுதிக் கொடுப்பது என்பது மேலே கண்டுள்ளவாறு விதி6(4)-ல் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆவணத்தின் மேலெழுத்துச் சான்றில்” The above document executed online by” என்று அச்சுப் பிரதியில் வருவதாலும், மேலும் ஆதாரிலிருந்து பெறப்படும் “eKYC” விபரங்களின் அச்சுப்பிரதிக்கு மேலே” The document is presented online” என்று வருவதாலும் ஆவணம் ஆன்லைன் வழிதாக்கல் செய்யப்பட்டதாக கருத வேண்டும். எனவே, பதிவுச்சட்ட விதிகளுக்கு உட்பட்டே ஆன்லைன் பதிவுமுறை செயல்படுத்தப்படுவதை அனைத்து பதிவு அலுவலர்களும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
2) ஆன்லைன்வழி ஆவணப்பதிவினை ஊக்குவிக்கும் முகமாக கீழ்க்கண்ட அறிவுரைகள் கூடுதலாக வழங்கப்படுகின்றன.
- ஆவணம் ஆன்லைன் வழிதாக்கல் செய்யப்பட்ட அன்றே அதனை உரிய முறையில் பின்பற்றி பதிவுசெய்ய வேண்டும்.
- தாக்கல் செய்யப்பட்ட அன்று பதிவு செய்யப்படாத நிலையில், மறுநாள் முதல் சார்பதிவாளருக்கு எச்சரிக்கை செய்தி வழங்கும் வண்ணமும், மூன்று நாட்களுக்கு மேல் ஏதேனும் ஆன்லைன் ஆவணங்கள் நிலுவையில் இருப்பின், அதனை பதிவு செய்த பின்னரே நேரடி ஆவணப்பதிவினை மேற்கொள்ளும் வண்ணமும் மென்பொருள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
- திருப்புச்சீட்டு வழங்குமுன் முழுமையாக ஆவணத்தை ஆராய்ந்து அனைத்து குறைகளையும் தெரிவித்து ஒரே முறையில் திருப்புச்சீட்டு வழங்க வேண்டும்.
- தேவையின்றி ஒரு முறைக்கு மேல் திருப்புச்சீட்டு வழங்ககூடாது.

3) திருப்புச்சீட்டு வழங்கப்பட்ட ஆவணம் சரிசெய்யப்பட்டு மீள சமர்ப்பிக்கப்பட்டால் அதனை பதிவிற்கு ஏற்க வேண்டும். புதிதாக டிபி எண் உருவாக்குமாறு கோரக்கூடாது. மேலும் கடைசியாக “தணிக்கை மாவட்டப்பதிவாளர்கள் Online வழி பதிவுசெய்த ஆவணங்களின் பட்டியல்கள் தனியாக எடுத்து தணிக்கைக்கு உட்புகுத்தப்பட வேண்டும். அதில் ஆவணத்தினை ஆய்வு செய்யும்போது இந்து சமய அறநிலையத்துறை, வஃக்ப் போர்டு அல்லது அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கப்பட வேண்டும், அதனுடன் Online registration-ல் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று தணிக்கை குறிப்புரையில் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.”
4) கீழ்க்கண்ட காரணங்களை தெரிவித்து ஆவணங்களை திருப்பி அனுப்பக்கூடாது.
- “முன் அசல் ஆவணம் சரிபார்ப்பதற்காக தாக்கல் செய்யப்படவில்லை”
ஆன்லைன் ஆவணப்பதிவைப் பொறுத்து முன்அசல் ஆவணம் கோரத்தேவையில்லை என IGR Circular No.22482/C1/2022. Dated: 02/02/2023 வழியாக ஆணை வழங்கப்பட்டுள்ளது.
- “முத்திரைத்தாளில் ஆவணம் தயார் செய்து ஆவணதாரர்கள் கையொப்பமிட்டு ஆன்லைன் ஆவணப்பதிவின் போது மேலேற்றம் செய்யவில்லை”
ஆன்லைன் பதிவுநடைமுறையைப் பொறுத்து தனியாக கையொப்பமிட்ட ஆவணம் என்ற நிலையே கிடையாது, ஆன்லைனில் உருவாக்கப்படும் ஆவணமே, சமர்ப்பிக்கப்பட்டு, சார்பதிவாளரால் பதிவு செய்யப்பட வேண்டும்.
- “ஆவணதாரர்கள் அலுவலகம் வரவில்லை”
ஏனெனில் ஆவணப்பதிவிற்கு ஆவணதாரர்கள் நேரில் வரத் தேவையில்லை என்பதே ஆன்லைன் பதிவின் அடிப்படை.
- “Index not entered correctly/ஆவணச் சுருக்கம் தவறாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளது”.
என்ன தவறு உள்ளது என்று தெளிவாக குறிப்பிட்டு மட்டுமே திருப்புச்சீட்டு வழங்க வேண்டும்.
- “Not indexed as per Section 22.
என்ன தவறு உள்ளது என்று குறிப்பிட்டு மட்டுமே திருப்புச்சீட்டு வழங்க வேண்டும்.
- ஆவணம் நேரடியாக தாக்கல் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டது. ஆன்லைன் வழி சமர்ப்பிக்கப்பட்டு சார்பதிவாளரால் ஆவணம் பதிவு செய்யப்படாத நிலையிலேயே, ஆவணதாரரார் அவசரம் கருதி நேரில் தாக்கல் செய்ய வேண்டிய நிலை எழுகிறது. இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்கப்பட வேண்டும்.
- PR Document Scan Pages not Clear and Showing as Black Shadow.
ஆன்லைன் ஆவணப்பதிவைப் பொறுத்து முன்அசல் ஆவணம் கோரத் தேவையில்லை என IGR Circular No.22482/C1/2022. Dated:2-2-23 வழியாக ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
- இதர காரணங்கள்: வங்கி முத்திரையும் கையொப்பமும் இல்லை.
வங்கி பணியாளரின் அடையாள அட்டை மட்டுமே வங்கியால் மேலேற்றம் செய்யப்படவேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை வழுவாது பின்பற்றி இணையவழி பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்களை அன்றன்றே பதிவு செய்து இணையவழி அனுப்பி வைக்க சார்பதிவாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
தேவையற்ற காரணங்களைத் தெரிவித்து ஆன்லைன் வழிபெறப்படும் ஆவணங்களை பதிவுக்கு மறுக்கும் நிகழ்வுகள் மிகவும் கடுமையாக கருதப்பட்டு சம்பந்தபட்ட சார்பதிவாளர்கள் மற்றும் அதனைக் கண்காணிக்கத்தவறிய மாவட்டப்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.” என்பதாக தெரிவித்திருக்கிறார், பதிவுத்துறை தலைவர்.
– அங்குசம் செய்திப்பிரிவு.