NEET போன்ற மத்திய அரசின் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் பெற்றோரா நீங்கள்? அவசியம் இதை தெரிஞ்சிக்கோங்க !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

NEET – UG 2025 விண்ணப்பிக்க அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. NEET போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வுகள் தேர்வு எழுத விரும்பும் +2 மாணவ மாணவிகள் & பெற்றோர் கவனிக்க வேண்டிய மிக முக்கிய அம்சங்கள்.

NEET – UG 2025 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் புதிதாக APAAR – ID அவசியம் தேவை.

இனிய ரமலான் வாழ்த்துகள்

APAAR - ID
APAAR – ID

APAAR – ID என்பது Automated Permanent Academic Account Registry – ID

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இந்த APAAR – ID இருந்தால் தான் NEET 2025 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த APAAR ID பெற, உங்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் உங்கள் பெயர் & பிறந்த தேதி எவ்வாறு உள்ளதோ அதே போல உங்கள் ஆதார் அட்டையிலும் இருக்க வேண்டும்.

அதே போல் உங்கள் தற்போதைய முக அடையாளமும் Face Recognition – ஆதார் தளத்தில் Update செய்யப்பட வேண்டும்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள Mobile எண் SIM Card Active ஆக Recharge செய்யப்பட்டு OTP பெறத்தக்க வகையில் இருக்க வேண்டும்.

மேற்காண் ஆதார் Updation சேவைகளை அனைத்து +2 படிக்கும் குழந்தைகளும் உடன் முடித்து வைத்துக் கொள்ளவும்.

அருகில் உள்ள வங்கிகள் – Banks & அஞ்சலகங்கள் – Post office & வட்டாட்சியர் அலுவலகங்கள் – Taluk office & ஊராட்சி – Panchayat office பேருராட்சி – Town Panchayat office  நகராட்சி – Municipal office மாநகராட்சி – Corporation office ஆகிய அலுவலகங்களில் செயல்படும் ஆதார் சேவை மையங்களில் செய்து கொள்ளலாம்.

ஆதார் திருத்தம் மிக மிக கவனம்.

ஒருவர் தனது பெயரை வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே ஆதாரில் திருத்த முடியும். பிறந்த தேதியை வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே திருத்த முடியும். ஆகவே, அனைவரும் திருத்தங்களை மேற் கொள்ளும் போது மிக மிக கவனமுடன் செயல்பட வேண்டும்.

நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கவும்,  Admit Card Download செய்யவும், Result Download செய்யவும், Counselling -ல் கலந்து கொள்ளவும். கல்லூரியில் அட்மிசன் கிடைக்கும் வரையும் OTP பெறத்தக்க வகையில் SIM Card Recharge செய்யப்பட்டு நடப்பில் பயன்பாட்டில்  இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம்.

 

—     அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.