கடற்கரை காற்று – தஞ்சை ஹேமலதா

0

🌹🌹🌹🌹

கடற்கரை காற்று

🌹🌹🌹🌹

 

சுண்டலும் சம்சாவும்

சூடாக விற்கும்

சிறுவன்

பட்டினியாய் !

 

தோளில் சுமக்கும்

புத்தகங்களை

புத்தியில்

ஒருநாள்

விடுமுறை

இது குடும்பத்தின்

சூழ்நிலை.

 

கடற்கரை காற்று

கவிதையின்

பாட்டு…

 

வயதான பெரியவர்

வயதாகாத இதயத்தால்

முறுக்கான  கடமையில்

முறுக்கு விற்பனை

முதியவா் வறுமை !

 

கூட்டம் கூட்டமாய்

காதல் பூக்களின்

அன்பு வாசம்….

வெளியே வந்தால்

சாதிகள் பேசும்

மரணத்தை வீசும்.

 

கடற்கரை காற்று

பல

விஷயங்கள் பேசும்…

      💐💐💐 

  — தஞ்சை ஹேமலதா.

Leave A Reply

Your email address will not be published.