சாதி ஆணி வேரை அறுத்தெறிய போராடு….
காதலித்தால்… ஆணவ கொலை!
நல்லா படித்தால்…. பொறாமை கொலை !
வாகனம் ஓட்டினால் ஆத்திரத்தில் கொலை !
அழகாய் இருந்தால்… ஆசையில் கொலை !
விளையாடி வென்றால்…கௌரவக் கொலை !
கொலைகளும் பலவிதம்..
ஆதிக்க சாதிகளும் பலவிதம்….
மீசையை முறுக்கி பெருமிதம்….!
இதைத்தான் எதிர்பார்க்குது
இந்து மதம்…
ஆண்ட பரம்பரை எங்கள் குடி பெருமை…
‘அவாளுக்கு’ மட்டும் நாங்கள் எப்போதும் அடிமை…
வேசி மொழி தமிழ் என்பான்…
வேசி மகன் நீ என்பான்…
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பான்..
கருவறையில் நுழைந்தால் தீட்டு என்பான்…
மணப்பெண்ணை தேவர்களுக்கு கூட்டி கொடுப்பான்…
குடியேற உழைத்தவனின் தீட்டு கழிப்பான்…
செத்தாலும் சுடுகாடு தனி என்பான்…
சமத்துவம் இங்கே கூடாது என்பான்…
ஆயிரம் சடங்குகள் மரபு என்பான்…
சடங்குகள் வைத்து வயிறு வளர்ப்பான்…
அவன் தான் இந்துமத ஆரிய பார்ப்பான்….
உன் வீரம் எங்கே புரிந்து விடும்…
முருக்கிய மீசையும் தொங்கிவிடும்…
அரிவாள் முனையும் மங்கிவிடும்….
உன் வீரம் எங்கே..? புரிந்துவிடும்…
நீ அடிமை பரம்பரை என்பது தெரிந்து விடும்….
சாதி வெறியின் புகலிடமா..? தமிழ்நாடு.
அதன் ஆணிவேரை அறுத்தெறிய போராடு…
அமைப்பாய் ஒன்று திரண்டு போராடு….
செ.கார்க்கி.
துவாக்குடி, திருச்சி.