நடுரோட்டில் ஹாயாக படுத்து மொபைல் பார்த்த அலப்பறை ஆசாமி !
சும்மா டென்ஷன் அதனால் ரோட்ல படுத்து இருக்கிறேன் – கோவில்பட்டி அருகே மது போதையில் ஹாயாக நடுரோட்டில் படுத்து கொண்டு மொபைலை பார்த்து கொண்டு அலப்பறை கொடுத்த ஆசாமி.
அரசு பேருந்து டிரைவரும், நடத்துனரும் மதுபோதையில் இருந்ததால் நான் இறங்க வேண்டிய இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் இறக்கிவிட்டதாக உளறிய போதை ஆசாமி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரையன். இவர் நேற்று இரவு கோவில்பட்டிக்கு சென்று வீட்டு ஊருக்கு அரசு பஸ்சில் சென்றுள்ளார். மது போதையில் இருந்தவர் ஊருக்கு செல்லாமல் கரிசல்குளத்தில் இறங்கியது மட்டுமின்றி நடுரோட்டில் படுத்து கொண்டு மொபைலை பார்த்து கொண்டு இருந்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனால் அப்பகுதியில் வந்த வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டி கேட்ட போது சும்மா டென்ஷன் அதனால் ரோட்ல படுத்து இருப்பதாக வீரையன் கூறினார்.
ரோட்ல படுத்த வாகனம் மேலே ஏறிவிட போகிறது என்று வாகன ஓட்டி கேட்க என் மேல வாகனம் ஏத்த ஒரு அப்பன் வார வேண்டும் என்று வீரையன் தெரிவித்துள்ளார். ரோட்டில் இப்படி படுக்கலமா என்று கேட்டதற்கு தப்பு தான் பேசக்கூடாது, காலையில் பேசுவோம் என்று கூறினார்.
மேலும் டிரைவரும், நடத்துனரும் போதையில் இருந்தாகவும், கொப்பம்பட்டிக்கு பதில் தன்னை இங்கு இறங்கி விட்டதாக கூறி அசிங்கமான வார்த்தையில் திட்டியுள்ளார். இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் வீரையனை அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் அமரவைத்து விட்டு சென்றனர்.
மதுபோதையில் வீரையன் செய்த கலாட்டாவினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
— மணிபாரதி.