“தயாரிப்பாளர்களே தயாரிப்பாளர்களை அழிக்கிறார்கள்”–தயாரிப்பாளர் தனஞ்செயன் தடாலடிப் பேச்சு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

எசகுபிசகான லெஸ்பியன் லவ் & மேரேஜ் பற்றிய படம் தான் ‘காதல் என்பது பொதுவுடமை’. வரும் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆவதால் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ( பிப்ரவரி 10) சென்னையில் நடந்தது. படத்தில் வினித் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விழாவில் இவர்களுடன் பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தனஞ்செயன், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர்கள் சசி, பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

விழாவில் பேசியோர்…

நடிகை லிஜோமோல் ஜோஸ்,
” நாங்க ரொம்பப் பெருமையா, சந்தோஷமா, காதல் என்பது பொதுவுடைமை படத்தை உங்க முன்னாடி கொண்டு வர்றோம். ஓரிரு நாளுல, இந்தப் படம் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்னு நாங்க நம்பலை. ஆனா நிச்சயம் நம்மைச் சுத்தியிருக்கிறவங்களைப் பத்தி நல்ல புரிதல் ஏற்படுங்கிறதை நாங்க நம்புறோம். அதைத்தான் இந்தப் படத்தோட வெற்றியா பார்க்கிறோம். அனுபவம் வாய்ந்த நடிகர்களான வினித் சார், ரோகிணி மேம் கூட நடிக்கக் கிடைச்ச வாய்ப்பை ஆசிர்வாதமாக கருதுறேன்”

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

'காதல் என்பது பொதுவுடமை'
‘காதல் என்பது பொதுவுடமை’

நடிகை ரோகிணி

“இந்தப் படம் ஏன் ‘கூடாது’ என்பதுதான் படம் எடுக்கிறதுக்கான முதல் காரணம். ‘இந்தப் படத்தை மலையாளத்தில் எடுங்க’ன்னு சொன்னபோது, ‘இல்ல என் தமிழ் ஆடியன்ஸ் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு’ன்னு ஒரு இயக்குநர் இப்படத்தைக் கொண்டு வந்திருக்காரு. இது சம்பந்தமான உரையாடலை எங்கு தொடங்கவேண்டும் என யோசித்து, குடும்பத்தில் துவங்கணும் என ரொம்ப அற்புதமாக எழுதியிருக்கார்.

நான் குணச்சித்திர நடிகையாக நடிக்க ஆரம்பித்த பின், இந்த மாதிரி ஷேடுள்ள கேரக்டரில் நடிச்சதில்லை. இந்த லக்‌ஷ்மி கேரக்டரை என்னால் சரியாகப் பண்ண முடியுமான்னு நினைச்சேன். எத்தனை எத்தனை கேள்விகள் இந்தச் சமூகத்தில் இருக்கோ, அத்தனை கேள்விகளையும் லக்‌ஷ்மி மூலமாக இயக்குநர் கேட்க வச்சிருக்காரு. நான் சமூகத்தின் முகமாக இந்தப் படத்துல வர்றேன். அது ரொம்பச் சேலஞ்சிங்கா இருந்துச்சு.

'காதல் என்பது பொதுவுடமை'அதோட, ரொம்ப அன்பான ஒரு அம்மாவோட பரிதவிப்பும் லக்‌ஷ்மியிடம் இருந்தது. நான் நிறைய அம்மா பாத்திரம் பண்ணியிருக்கேன். நான் பண்ண ஒவ்வொரு அம்மாவும் வேற வேற அம்மா. ஹீரோக்கு அம்மாவா நடிக்கணும் என இயக்குநர் யாராச்சும் சொன்னா, ‘அம்மாங்கிறது ஒரு கதாபாத்திரமே கிடையாது. ஹீரோக்கு அம்மா யாரு? கோபமானவங்களா? கஷ்டப்பட்டு வந்தவங்களா? இல்ல கர்வமா பேசுறவங்களா? அவங்களால கதையில் ஏதாச்சும் நடக்குதா?’ எனக் கேட்பேன்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சில படத்துல தான் நான் ரொம்ப சரியா நடிச்சுருக்கேன் எனத் திருப்தியா இருக்கும். அதுல இந்த லக்‌ஷ்மி கேரக்டரும் ஒன்னு. இது எங்களோட கதை ஒரு அம்மா – பொண்ணு கதை இந்தப் படம் பேசும் அரசியலை மீறி, இந்தப் படம் உங்களை என்கேஜ் செய்யும். இங்கயும் மலையாளப் படங்கள் மாதிரி நல்ல படங்கள் எடுக்க முடியும், அதை ஆதரிக்க தமிழ் ஆடியன்ஸ் ரெடியா இருப்பாங்க என்பதை நாம் நிரூபிச்சுக் காட்டணும். எல்லாத்தையும் விட, பேசாப்பொருளைப் பேசுறதுதான் ஒரு கலையோட வேலையே! அதுதான் கலையின் பொறுப்பும் அழகும். அதை நாங்க செய்திருக்கிறோம்”

இயக்குனர் ஜெயப்பிரகாஷ்
“நானும் எனது நண்பர் சுரேஷும் உருவாக்கிய கதை தான் இந்த ‘காதல் என்பது பொதுவுடைமை’. முதலில் இதை தமிழில் எடுக்க நினைக்கவில்லை, நண்பர்கள் தான் இந்த படத்தை தமிழில் எடுக்கலாம் என்று எனக்கு ஊக்கமளித்தார்கள்.
இந்த திரைப்படத்தை நாங்கள் 28 நாட்களில் எடுத்து முடித்துள்ளோம். அனுபவம் வாய்ந்த நடிகர்களால் தான் இதனை இவ்வளவு சீக்கிரம் முடித்தோம். நான் தமிழில் படம் எடுக்க முயற்சித்த போது சில பேர் மலையாளத்திலும், ஹிந்தியிலும் எடுக்க சொன்னார்கள்.

நான் கோபத்தில் வேண்டுமென்றே எடுத்தேன் தமிழ்நாட்டில் படத்தை வாங்க OTT தளத்தில் வாங்க மறுக்கின்றனர். இதனால் படத்தை வெளியிடுவதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் எனக்கு டிஸ்ட்ரிபியூட்டர் தனஞ்செயன் உதவியுள்ளார் அவருக்கு நன்றி. மற்றும் இந்தப் படத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி”.
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசிய இயக்குனர்கள் படத்தைப் பற்றி பேசினர்.

படத்தை வெளியிடும் தனஞ்செயன்…

“தமிழ் சினிமாவில் இப்படிபட்ட படம் மெயின் ஸ்க்ரீனில் வருவதில்லை. தமிழ் சினிமாவில் ஒரு வாரத்திற்கு 7 அல்லது 8 படங்கள் வருகின்றன. இது தயாரிப்பாளர்களே தயாரிப்பாளர்களை அழிக்கும் வேலை. மேலும் ஒரே நேரத்தில் ஏழெ படங்கள் வந்தால் மக்கள் பார்க்க படங்கள் ரிலீஸ் ஆனால் மக்களும் தியேட்டருக்கு வரமாட்டார்கள். என்னத்த எழுதுறதுன்னு பத்திரிகையாளர்களுக்கும் சலிப்பு வரும். வாரத்துக்கு நாலு படங்கள் ரிலீஸ் பண்ணனும்னு தயாரிப்பாளர்கள் கூடிப் பேசி முடிவு எடுக்கலேன்னா நிலைமை ரொம்பவே மோசமாகிரும்” என சரமாரியாக போட்டுத் தாளித்துவிட்டார் தனஞ்செயன்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நடிகர் வினித்

“நான் இந்த படத்தில் நடிக்கும் போது படம் எவ்வாறு இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் படம் பார்க்கும்போது அற்புதமாக வந்திருக்கிறது. படம் குறித்து நான் அதிகமாக பேசவில்லை. மக்கள் கண்டிப்பாக பார்த்து பேசுவார்கள்” .

 

—  மதுரை மாறன்.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.