தேனியில் அதிரடி காட்டிய மதுவிலக்கு போலீசார் ! ஐந்து பேர் கைது ! 6 கடைகளுக்கு சீல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேனியில் அதிரடி காட்டிய மதுவிலக்கு போலீசார் ! ஐந்து பேர் கைது ! 6 கடைகளுக்கு சீல் ! தேனி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 147 கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டு, சட்ட விரோத மது, கஞ்சா, புகையிலை, கெட்டுப்போன குளிர்பானங்கள் உணவு பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு 2,15,000 ஆயிரம் ரூபாய் அபராத விதித்தும், ஐந்து பேரை கைது செய்தும் அதிரடி காட்டியிருக்கிறார்கள், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அதிகாரிகள்.

அதிரடி காட்டிய மதுவிலக்கு போலீசார்
அதிரடி காட்டிய மதுவிலக்கு போலீசார்

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

‘உங்கள் ஊரில் உங்களைத் தேடி’ நிகழ்ச்சியை முன்னிட்டு இந்த அதிரடி ஆய்வை நடத்தியிருப்பதாக தெரிவிக்கிறார்கள். சட்ட விரோத மது விற்பனை, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை தடுக்கும் பொருட்டு, தேனி, காமராஜபுரம், கோம்பை, ஏரசை வீரபாண்டி, கள்ளிப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் இந்த திடீர் ஆய்வை நடத்தியிருக்கிறார்கள்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்த அதிரடி ஆய்வில், சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து 135 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளிலிருந்து 7 கிலோ அளவிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றியதோடு, விற்பணை செய்த கடைகளையும் சீல் வைத்து மூடியிருக்கிறார்கள்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அதிரடி காட்டிய மதுவிலக்கு போலீசார்
அதிரடி காட்டிய மதுவிலக்கு போலீசார்

அதேபோல், வீரபாண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபரிடமிருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றி அவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அதிகாரிகள்.

ஜெய்ஸ்ரீராம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.