பா ரஞ்சித் அவர்களும்  – மாரி செல்வராஜ் அவர்களும்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பா ரஞ்சித் அவர்களும்  – மாரி செல்வராஜ் அவர்களும்

எனக்கும் ரஞ்சித் அவர்களுக்கும் பொலித் தகராறு எதுவும் இல்லை. அவருடைய பெரும்பாலான படங்கள் பார்த்து விட்டேன். ஆனாலும் அவர் மீது ஏதோ ஒரு ஒவ்வாமை இருக்கிறது. அது

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

சாதிய ரீதியான ஒவ்வாமை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். அவருடைய திரைப்படங்களிலும் சரி அவருடைய மேடை உரைகளிலும் சரி அவர் தனக்குத் தானே ஒரு நிழல் எதிரியை உருவாக்கிக் கொண்டு தனது வாளைக்கொண்டு நிழல் யுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். உண்மையில் அவருடைய பகைவர் யார் ?

அவருடைய மக்களை தவிர மற்றவர்கள் அனைவரையும் எதிரியாக பார்க்கிறாரா அல்லது குறிப்பிட்டு ஒரு சமூகத்தை எதிரியாக பார்க்கிறாரா என்று இதுவரை எனக்கு புரியவில்லை.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

ஆனால் தங்களுடைய இந்த நிலைமைக்கு காரணம் நானும் காரணம் நீங்களும் காரணம் நாமும் காரணம் என்பது போல அவருடைய படங்கள் ஒரு ஒற்றைத்தன்மையோடு பேசுவது ஏனோ பிடிக்கவில்லை

தேவர்மகன் சின்ன கவுண்டர் போன்ற படங்கள் எல்லாம் கவுண்டர் தேவர் பெருமையை பேசுவதற்காக எடுக்கப்பட்ட கதை அல்ல

அப்படி எந்த இடத்திலும் காட்டப்படவில்லை

கிராமத்தில் இயற்கையாக நிகழும் நிகழ்வுகளை அவர்கள் படம் பிடித்தார்கள். அதேசமயம் தன்னுடைய ஜாதி பெருமை எவரும் தூக்கி நிறுத்துவதற்காக படம் எடுக்கவில்லை. தேவர் மகன் எஜமான் சின்ன கவுண்டர் போன்ற படங்களுக்கு முன்பு எத்தனையோ மேலாதிக்க   இனத்தைச் சேர்ந்த ஒரு வில்லனோ ஒரு பெரியவரோ காட்டப்படும் போது அது தமக்கு கீழே பணியாற்ற கூடிய ஒடுக்கப்பட்ட மக்கள்

மீது ஒரு தனி மனிதன் காட்டக்கூடிய சாதி ஆனவம் மட்டுமே படத்தில் பேசப்படும்

தேவர் மகன் படம் தன்னுடைய மக்கள் படிப்பறிவு இல்லாமல் வன்முறையை கையில் எடுத்துக் கொள்வதை விரும்பாத பெரிய தேவர்

அவர்களை நல்வழிப்படுத்த விரும்புகிறார் இறுதியில் சின்ன தேவரான கமலஹாசனும் அதைத்தான் செய்கிறார். இதில் மற்ற எந்த சாதியையும் அல்லது ஒடுக்கப்பட்ட சாதியையும் காட்டவில்லை..

முழுக்க முழுக்க தங்களுடைய சாதிக்குள் இருக்கக்கூடிய முரண்களை பேசக்கூடிய படமாக அது இருந்தது.. இது தான் எஜமான் சின்ன கவுண்டர் போன்ற படங்களும் பேசின

ஆனால் பா. ரஞ்சித் தன்னுடைய இனப்பெருமையை பேசுவதற்காக படம் எடுப்பது மட்டுமல்ல. நம்மில் யாரோ அவருடைய நிலங்களை பறித்துக் கொண்டது போலவும் அவர்களுடைய இந்த கீழான நிலைக்கு நாம் அனைவரும் காரணம் என்பது போலவே ஒவ்வொரு படத்திலும் காட்டுகிறார். வரலாற்று ரீதியாக அவ்வாறு இல்லை

இது பற்றி ஏற்கனவே பதிவு எழுதி உள்ளேன். ஒடுக்கப்பட்ட மக்கள் பேரரசுகளின் ராணுவத்தில் பணிபுரிந்துள்ளனர் அவர்களுக்கு சிறிது நிலம் அளிக்கப்பட்டு உள்ளது.

இது பற்றி விரிவாக ஒரு சமயம் எழுதலாம்…

பொதுவாக சாதிகள் தோன்ற காரணம் வலங்கை, இடங்கை என்ற பிரிவினை எப்போது வந்ததோ அப்பொழுது சாதிகள் இங்கே வலுப்பெற ஆரம்பித்தன.

தலித்துகள் மட்டுமல்ல தறி நெசவு செய்பவர்கள் கம்மாளர்கள் தச்சு வேலை செய்பவர்கள் போன்ற இனங்கள் எல்லாமே இடங்கை பிரிவுக்கு வந்தன

வலங்கை பிரிவுக்கு வந்தவர்கள் வளமாக வாழ ஆரம்பித்தனர். காரணம் அரசர்கள் வழங்கிய சலுகைகள் நிலங்கள் போன்றவை இந்த சாதி பிரிவினையை அதிகப்படுத்தியது

இது வரலாற்று ரீதியாக Dioletical நடந்த நிகழ்வு தான்.

ரஞ்சித் நினைப்பது போல நிலங்களை மற்றவர்கள் வாரிக் கொண்டு போனார்கள் என்று சொல்ல முடியாது .

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தவிர நிலம் என்பது இப்போது விலைமதிப்பில் அப்போது இல்லை.

இப்போது போயஸ் கார்டனில் ஒரு சதுர அடி 35 ஆயிரம் ரூபாய்.

ஆனால் அந்த இடத்தை போயஸ் என்ற ஆங்கிலேயர் வாங்கும் பொழுது மொத்த இடமே 35 ஆயிரம் ரூபாய் தான்

ஆக ஒரு ஏழை குடியானவர் இடமோ ஒரு தலித்திடமோ‌ இருந்த  நிலமோ பெரிய தொகை அல்ல

நான் அறியவே 1986 இந்த வத்தலக்குண்டு ஐந்து சென்ட் நிலம் 12000 ரூபாய்க்கு வாங்கினேன். அதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால்

நிலங்களின் மதிப்பு ஒரு ஏக்கர் 100 ரூபாய் 200 ரூபாய் இருந்தாவே பெரிய விஷயம்

அந்தக் காலகட்டங்களில் பலரின் நிலங்கள் பலபேருக்கும் கை மாறின

அது பராமரித்தவன் பணக்காரன் ஆனான் அதை கைவிட்டவன் ஏழை ஆனான் இது எல்லா சமூகத்திலும் உள்ளது தான்

இப்படி கடந்து போன கல்லறை வரலாற்றை எடுத்து தன்னுடைய ஆதங்கத்தை ரஞ்சித் தீர்த்துக் கொள்ளுகிறார். தன்னுடைய இனத்தவர்களை தவிர மற்றவர்கள் எல்லாம் எதிரியாக அவர் சித்தரிக்கிறார்

நாள் மாரி செல்வராஜ் அவ்வாறு அல்ல அவர் தன்னுடைய இனத்தின் உடைய கண்ணீரை வலிகளில் வாழ்க்கையை தன்னளவில் வெளிப்படுத்துகிறார் மற்ற இடங்களோடு இணக்கமாக போக அவர் விரும்புகிறார்.

இயற்கையில் தான் இந்த பிளவு ஏற்பட்டது என்பதை அவர் புரிந்து வைத்துள்ளார்.  தன்னுடைய மக்களுடைய பாடுகளை படம் பிடித்து காட்ட வேண்டும் என்ற நல்லெண்ணம் மட்டுமே அவரிடம் உள்ளது. மற்ற இனங்கள் மீது எந்த காழ்ப்பும் அவருக்கு இல்லை எந்த இடத்திலும் அவருடைய படங்களில் அவ்வாறு வருவது இல்லை கர்ணன் படம் கூட தனக்கு பாதிப்பு ஏற்பட்டதனால் வஞ்சம் தீர்ப்பார் கர்ணன்.

மற்றபடி தன்னுடைய சாதி நசுக்கப்பட்டதற்கு மற்ற சாதியினர் காரணம் அல்ல என்பதை அவர் உணர்ந்தே வைத்திருக்கிறார்.

ஒரு கலைஞன் இப்படித்தான் சிந்திக்க வேண்டும் இல்லாத எதிரியை உருவாக்கிக் கொண்டு போர் விடுவது  கலை அல்ல அவன் கலைஞனும் அல்ல

ரஞ்சித் அவர்கள் களப்போராளி போல காட்டிக் கொள்ளும் ஒரு கலைஞர் ‌என்று சொல்லலாமே தவிர உண்மையான கலைஞன் என்பதை நான் மாரி செல்வராஜுடன்தான் பார்க்கிறேன்….

மாரி செல்வராஜ் அவர்களை மிக மிக மிக நேசிக்கிறேன் .

அவரை ஆரத்தழுவி அன்பு காட்ட ஆசைப்படுகிறேன்.

அடங்க மறு.. அத்துமீறு திருப்பி அடி  போன்றவற்றை திருமாவளவன்

கூட இப்போது கைவிட்டு விட்டார்… மற்ற கட்சிகளின் மற்ற சமூகத்தின் அனுசரணை இன்றி தலித் விடுதலை என்பது சாத்தியமில்லை என்பதை திருமா நன்கு புரிந்து வைத்துள்ளார்.

ரஞ்சித் அதில் அரிச்சுவடு கூட படிக்க தயாராக இல்லை

 

டிஜிட்டல் எழுத்தாளர்

ஜெயதேவன்

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.